districts

img

பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க வலியுறுத்தல்

நாமக்கல், டிச.22- பஞ்சாலைத் தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.544 வழங்க வேண்டும், என சிஐ டியு வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் சங்க (சிஐடியு) மகா சபை கூட்டம், வெப்படையிலுள்ள தனியார் மண்டபத்தில் சங்கத்தின்  மாவட்டத் தலைவர் வெங்கடாச்ச லம் தலைமையில் ஞாயிறன்று நடைபெற்றது. அஞ்சலி தீர்மா னத்தை ராயப்பன் வாசித்தார். மாதேஸ்வரி வரவேற்றார். சிஐடியு  தமிழ்நாடு பஞ்சாலை சம்மேனன மாநிலத் தலைவர் எம்.சந்திரன் துவக்கவுரையாற்றினார். மாவட் டச் செயலாளர் எஸ்.தனபால் அறிக் கையை முன்வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோகன், பஞ்சாலைத் தொழிலாளர் சம்மே ளன மாநிலச் செயலாளர் வி. மாணிக்கவாசகம் வாழ்த்திப் பேசி னர். இக்கூட்டத்தில், பஞ்சாலைத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலியாக ரூ.544 வழங்க வேண் டும். இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்ட உரிமைகள் வழங்க வேண்டும். சட் டப்படி பணி நிரந்தரத்தை உறுதி செய்யப்படுவதுடன், சம்பள பட்டி யல் வழங்க வேண்டும். பிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்யப்பட்ட தொழிலாளிகளுக்கு யுஏஎன் எண் வழங்க வேண்டும். இஎஸ்ஐ பிடித் தம் செய்த தொழிலாளிகளுக்கு குடும்ப அடையாள அட்டை வழங்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவராக ஆர்.வெங்கடாச்சலம், மாவட்டச் செயலாளராக எஸ்.தனபால், மாவட் டப் பொருளாளராக பி.வீரமுத்து மற்றும் உதவித்தலைவர்கள், உத விச்செயலாளர்கள் என 10 நிர்வா கக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்ட னர்.