districts

img

அமராவதிபாளையம் மாட்டு சந்தையில் இந்த வாரம் வரத்து குறைவு

திருப்பூர், ஜன.6- அமராவதிபாளையத்தில் திங்களன்று நடைபெற்ற மாட் டுச்சந்தையில் மாடுகள் குறைந்த அளவே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. திருப்பூர் கோவில் வழி அடுத்துள்ள அமராவதிபாளை யத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை மாட்டுச்சந்தை நடை பெற்று வருகிறது. இந்த சந்தையில் கறவை மாடுகள், காளை  மாடுகள், ஜெர்சி மாடுகள்,  நாட்டு மாடுகள் கிடாரி, எருதுகள்  என ஏராளமான மாட்டு இனங்களை கால்நடை வளர்ப்பவர்கள்  விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். பாரம்பரியம் மிக்க  இந்த மாட்டுச்சந்தையில் திருப்பூர் மாவட்டம் மட்டுமல்லாது,  சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, கர்நா டக உள்ளிட்ட வெளி மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகளும் மாடுகளை வாங்கவும் விற்கவும் இங்கு வருவது வழக்கம். பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி திங்க ளன்று நடைபெற்ற மாட்டுசந்தையில் கடந்த வாரத்தை காட்டி லும் குறைந்த அளவு மாடுகள் மட்டுமே விற்பனைக்கு கொண் டுவரப்பட்டு இருந்ததாக சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்த னர்.  மொத்தமாக 752 மாடுகள் விற்பனைக்கு கொண்டுவ ரப்பட்டு இருந்தது. இதில் கன்றுகள் 3500 ரூபாய் முதல் 5 ஆயி ரம் ரூபாய் வரையிலும்,  காளை 34 ஆயிரம் ரூபாய் முதல் 39  ஆயிரம் வரையிலும்,  எருமை 26,500 முதல் 31 ஆயிரம் ரூபாய்  வரையிலும், மாடுகள் 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் ரூபாய்  வரையிலும் விற்பனையானதாக கூறப்பட்டது. இதைதொடர்ந்து வரும் வாரம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் வரத்து குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும்,  பொங்கல் பண்டிகை முடிந்த  பிறகு  மீண்டும் வரத்து அதிகரிக்க கூடிய வாய்ப்பு இருப்பதா கவும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.