districts

img

நவீன காலத்தில் கேள்விக்குள்ளாகும் மனித உயிர்கள்!

உடுமலை, ஜன.10- சாலை வசதி இல்லாததால் மலை வாழ் மக்கள் மருத்துவ தேவைக ளுக்காக நோயாளிகளை இன்றும் தொட்டில் கட்டி தூக்கி வரும் அவலம்  உடுமலை பகுதியில் தொடர்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலை தாலுகா, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 18 மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடி யிருப்புகளுக்கு மலை அடிவார பகு தியில் இருந்து காட்டுப்பகுதியில் இருக்கும் ஒற்றை அடி பாதையில் நடந்து செல்ல வேண்டும். கடந்த ஆண்டு உடுமலை வன அலுவலகத் தின் முன்பு தமிழ்நாடு மலைவாழ் மக் கள் சங்கத்தின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் விளைவாக திரு மூர்த்தி மலை பகுதியில் இருந்து குருமலை மலைவாழ் மக்கள் குடி யிருப்புக்கு சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் வனக்குழு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி தளி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் திருமூர்த்தி மலை பகுதியில் இருந்து குரும லைக்கு சாலை அமைக்க சுமார் 44 லட் சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு சாலை போட சென்றவர்களை வனத் துறை தடுத்த காரணத்தால் சாலை  அமைக்கும் வேலை தடைபட்டுள் ளது. இந்நிலையில், தளி பேரூராட் சிக்குட்பட்ட குருமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன்  சரவணன் (30) வியாழனன்று மளி கைப் பொருட்கள் வாங்க மலை அடி வார பகுதியான திருமூர்த்தி  மலைக்கு சென்றுள்ளார்.  பொருட்கள் வாங்கிவிட்டு திரும்ப வரும்போது, கருஞ்சோலை வனப்பகுதியில் பாம்பு கடித்துள்ளது. பாம்பு கடித்த சரவணனை உடுமலை அரசு மருத் துவமனைக்கு கொண்டு செல்ல குரு மலையில் இருந்து மலை அடிவார பகுதியான திருமூர்த்தி மலைக்கு தொட்டில் கட்டி தூக்கி வந்தனர். இதன்பின் உடுமலை அரசு மருத்து வமனையில் முதலுதவி அளிக்கப் பட்டு, மேல் சிகிச்சை பெற கோவை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.