districts

img

உங்களை நீங்களே கலாய்த்து கொண்டால் எப்படி? அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கிண்டல்

கோவை, டிச.28- உங்களை நீங்களே கலாய்த்து கொண் டால் நாங்கள் என்ன செய்வது, கலாய்க்க மனம் வரவில்லை என பாஜக மாநிலத் தலை வர் அண்ணாமலையின் சவுக்கடி போராட் டம் குறித்து தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா கோவையில் கிண்டலாக தெரிவித்தார். கோவை மாவட்டம், சூலூர் அடுத்த முத்து கவுண்டன்புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக கோவை மண் டல ஐடி விங் ஆய்வு கூட்டம் சனியன்று நடை பெற்றது. இதில் கோவை, ஈரோடு, திருப் பூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட் டங்களைச் சேர்ந்த திமுக ஐடி விங் நிர்வாகி கள் பங்கேற்றனர். இதில் சிறப்பு அழைப்பா ளர்களாக மின்சாரத்துறை அமைச்சர் செந் தில் பாலாஜி மற்றும் தொழில்துறை அமைச் சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஐடி விங் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர். இவ்விழாவில் பங்கேற்ற, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், புதிதாக வந் துள்ள சர்க்கஸ் கூடாரத்திற்கு ஈடு கொடுப்ப தற்காக மற்றொரு சர்க்கஸ் கம்பெனியை சேர்ந்த கோமாளிகள் புதிய வேடங்களை போடு கின்றனர். இது நகைப்பை ஏற்படுத்தினா லும், அவர்களை அவர்களே கலாய்த்து கொள் ளும் செயல்களை செய்து வருகிறார்கள். அத னால் அவர்களை கலாய்க்க கூட மனம் வர வில்லை. 6 சவுக்கடிகள் என்பது என்ன என்று  புரியவில்லை. ஜெய் ஸ்ரீ ராம் சொல்பவர்கள் 108 திவ்ய தேசங்கள் தொடங்கி காசி வரை சென்று அங்கெல்லாம் சவுக்கடி கொடுத்துக் கொள்ளட்டும். ஆனால் அண்ணாமலை இங்கே இருந்தால்தான் எங்களுக்கு கன் டென்ட் கிடைக்கும், என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, பாஜக மாநி லத் தலைவர் அண்ணாமலையின் சாட்டை யடி போராட்டம் குறித்த கேள்விக்கு, இது போன்ற போராட்டங்களை தவிர்க்க வேண் டும். இது மற்றவர்களுக்கு முன்னுதாரண மாக அமைந்த விடக்கூடாது. மேலும் இது போன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்க ளுக்கு நல்ல மனநல ஆலோசனை வழங்கப் பட வேண்டும். பல்கலை மாணவி பாலியல் வழக்கில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து உள் ளது. இந்த விவகாரத்தை அரசியலாக்கி லாபம்  தேட முயற்சிப்பது வருத்தத்திற்குரியது. இது போன்ற நேரத்தில் அனைத்து இயக்கங் களும் ஒன்றாக சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு துணை நிற்க வேண்டும். முதல்வ ருக்கு மக்களிடையே கிடைக்கும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாமல் இது  போன்ற வேலைகளை செய்து வருகின்ற னர். இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிட்டு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட அனைத் துக் கட்சிகளும் முன்வர வேண்டும், என் றார்.