districts

img

கைத்தறியில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்திடுக

திருப்பூர், ஜூலை 13– இலவச வேட்டி, சேலையை கைத்தறியில் உற்பத்தி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி காங் கேயத்தில் கைத்தறி நெசவாளர் கள் தொழிற்சங்க கூட்டமைப் பினர் பேரணியாக சென்று, வட் டாட்சியரிடம் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், காங் கேயம் வட்டாரத்தில் கைத்தறி நெசவுத்தொழில் கணிசமாக நடை பெற்று வருகிறது. பல்வேறு கார ணங்களால் கைத்தறி நெசவாளர் கள் தற்போது கடும் நெருக்கடி யைச் சந்தித்து வருகின்றனர். இந் நிலையில், கைத்தறி நெசவாளர் களின் வாழ்வாதாரக் கோரிக்கை களை முன்வைத்து கைத்தறி நெச வாளர் தொழிற்சங்க கூட்டமைப் பினர் வியாழனன்று காங்கேயம் -  திருப்பூர் சாலை, ஹாஸ்டல் பேருந்து நிறுத்தம் முன்பிருந்து பேரணியாக சென்றனர். இதில்  நூற்றுக்கணக்கான பெண் நெசவா ளர்கள் உட்பட பெருந்திரளான கைத்தறி நெசவாளர்கள் பங்கேற் றனர். இப்பேரணி திருப்பூர் சாலை யில் இருந்து பேருந்து நிலையம் வழியாக சென்று கோவை சாலை யில் உள்ள காங்கேயம் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு நிறைவ டைந்தது. சிஐடியு கைத்தறி நெசவாளர் சங்க திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.திருவேங்கடசாமி, மாவட்டச்  செயலாளர் என்.கனகராஜ் உள் ளிட்டோர் தலைமை ஏற்று அணி வகுத்து வந்தனர். அப்போது ஒன்றிய, மாநில அரசுகள் பட்டு நூல், கைத்தறி ரகங்களை விசைத் தறியில் உற்பத்தி செய்வதைத் தடை செய்ய வேண்டும். குறைக் கப்பட்ட கைத்தறி நெசவாளர் கூலியை உயர்த்தி வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். 60  வயது பூர்த்தியடைந்த நெசவாளர் களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம்  வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப் பட்டன. இதைத்தொடர்ந்து வட்டாட் சியரிடம் கோரிக்கை மனு அளிப்ப தற்காக சென்றபோது, வட்டாட் சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அலுவ லகத்தில் இல்லை. இதையடுத்து அவர் வரும் வரை அங்கேயே காத் திருப்பது என்று 100க்கும் மேற் பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத் தில் அமர்ந்திருந்தனர்.

இதனை யடுத்து,  அங்கு வந்த காங்கேயம்  வட்டாட்சியரிடம், கைத்தறி நெச வாளர் தொழிற்சங்கங்கள் கூட்ட மைப்பின் நிர்வாகிகள் மனு அளித் தனர். அம்மனுவில், கைத்தறி ரகங் களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதைத் தடுக்கவும், 21 ரகங் களைக் கைத்தறியில் உற்பத்தி செய்வதை உறுதிப்படுத்தவும், ஜவுளிக் கடைகளில் கைத்தறி புடவை என்று விசைத்தறியில் உற் பத்தி செய்த புடவைகள் விற்பனை  செய்வதைக் கண்டறிந்து  அதை  தடுக்கவும் அரசு உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும். கூட்டுறவு சங்கங் கள் முறையாக செயல்பட நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு  முழுவதும் கைத்தறி நெசவாளர் களுக்கு வேலை கிடைக்கும் வகை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,  இலவச வேட்டி, சேலைகளை கைத் தறியில் உற்பத்தி செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும். தனியார் புடவை உற்பத்தியா ளர்களை அழைத்துப்பேசி, கூலிக் குறைப்பை தடுக்க வேண்டும். பட்டு  நூல், ஜரிகை உள்ளிட்ட மூலப் பொருட்கள் விலை ஏற்ற – இறக்க மின்றி, சீரான விலையில் கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி நெசவாளர் கூட்டுறவு  வங்கி ஏற்படுத்தி, நெசவாளர் களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில்  நிதி உதவி கிடைக்க வழிவகை  செய்ய வேண்டும். காங்கேயம் நகரம் முழுவதும் ஒன்றுபடுத்தி கைத்தறிக் குழுமம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட் டுள்ளது.