கட்டடம் கட்டி 15 ஆண்டுகளே ஆகிறது
மதுராந்தகம்,நவ.15 காஞ்சிபுரம் மாவட்டம் மது ராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட படாளம் ஊராட்சியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகின்றது. இப்பள்ளியில் படாளம், புலிப்பரக்கோயில் பாத்தூர், பழை யனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 85 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆறு ஆசிரியர்கள் பணி யாற்றி வருகின்றனர். பள்ளி வளாகத்தில் 2005 ஆம் ஆண்டு மற்றும் 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்ட தலா மூன்று வகுப்பறை கள் கொண்ட இரண்டு கட்டிடங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. கட்டிடத்தில் விரிசல் விட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையி லும் ஒரு அடிக்கும் மேலாகக் கட்டடங் கள் பூமிக்குள் இறங்கியும் காணப் படுகின்றது. இதனால் மாணவர்க ளும், ஆசிரியர்களும் அச்சத்தில் உள்ளனர். இதனால் அந்த கட்ட டத்திற்குள் வகுப்புகள் நடத்தாமல் பூட்டிவைக்கப்பட்டுள்ளது. மற்றொரு கட்டடத்திலும் அதே நிலை என்றாலும் வேறு வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் ஆபத்தான நிலையில் கல்வி கற்று வருகின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது மாண வர்கள் நலன் கருதி அந்த கட்டடம் கடந்த 7 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் அலுவலர்களுக்குக் கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது என்றார். கட்டுமானத்தில் முறைகேடு அப்பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ராஜாவிடம் கேட்டபோது அரசு பள்ளி கட்ட டங்கள் நூறு ஆண்டுகளைக் கடந்த கட்டடங்கள் கூட நல்ல நிலையில் இருப்பதைக் காணமுடிகின்றது. ஆனால் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையில் இப்படி இடியும் நிலையில் இருப்பது தற்போது உள்ள அரசுகளின் நிலையையும், அவர்கள் செய்யும் ஊழலையும் காண முடிகிறது. பள்ளி மாணவர்களுக்கு அந்த கட்டடத்தால் ஏதும் விபத்து நடக்கும் முன் கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும். பள்ளி மாண வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கட்டடங்களை ஒப்பந்த தாரர்களை வைத்துக் கட்டாமல் பொதுப்பணித்துறை மூலம் கட்ட நட வடிக்கை எடுத்திட வேண்டும் என்றார்.