உடுமலை, டிச.31- விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்ப டுத்தும் வகையில் இருக்கும் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இழப்பீடு பெறு வதற்கு, பயிர்க்கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த வேளாண்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளை நீக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள் ளனர். உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் கடந்த மாதம் பெய்த மழையால் விவசாயப் பயிர்கள் கடுமையாக சேதமடைந் தன. விவசாயிகள் தாங்கள் விளை வித்த பயிர்களுக்கு கூட்டுறவு வேளாண் கடன் சங்கத்தின் மூலம் பயிர்க்கடன், வேளாண் துறையின் மூலம் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இவ்வ கையில் பயிர் காப்பீடு திட்டத்தின் பயன் பெற கடுமையான கட்டுப்பா டுகள் உள்ளது. பயிர் கடன் திரும்பச் செலுத்தும் நிபந்தனைகளை மாற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளார்கள். இது குறித்து விவசாயிகள் சிலர் கூறுகையில், கடந்த காலங்களில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டும் என்றால் மாவட்ட அளவில் அதிக சேதாரம் ஏற்பட்டால் மட்டுமே இழப்பீடு பெற முடியும் என்ற நிலை இருந்தது. விவசாய சங்கங் கள், விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதைய டுத்து, கிராம அளவில் பயிர்கள் சேதம் ஏற்பட்டால் காப்பீடு திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கபட்டது. ஆனால் தற்போது, மீண்டும் பயிர்களின் தன் மையை ஒன்றிய (பிளாக்) அடிப்படை யில் சேத அளவை கணக்கிடுகின்ற னர். எனவே இந்த நடைமுறையை மாற்றி, காப்பீடு செய்த பயிர்கள் எங்கு சேதம் அடைந்தாலும் அதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், பயிர்க்கடன் வழங்கும் திட் டத்தின் மூலம் தென்னை மரங்க ளுக்கு ஒரு வருட தவணையும், மக் காச்சோளம் பயிர் செய்ய ஆறு மாத கால தவணையும், கொண்டக்க டலை பயிர் செய்ய இரண்டு மாத தவ ணையில் பயிர் கடன்களை திருப்பி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை யின்படி விவசாயிகளுக்கு கடன் தரப் படுகிறது. விவசாயிகளுக்கு வேளாண்மை செய்யப் போதிய பணம் இல்லாமல் தான் கடன் பெறுகி றார்கள். தவணைகளை குறுகிய காலத்தில் திருப்பி செலுத்த வேண் டும் என்று நிபந்தனை விதிப்பதன் மூலம் மீண்டும் கடன் சுமை அதிக ரிக்கிறது. மேலும், தற்போது பெய்த மழையால் இப்பகுதி விவசாய பயிர் கள் கடுமையாக சேதமடைந்துள் ளது. எனவே பயிர் கடன் குறித்த நிபந் தனைகளில் மாற்றம் செய்ய வேண் டும் என்று கோரிக்கை வைத்து உள்ள னர்.