ஈரோடு, டிச.22- பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில், ஸ்டார்ட் அப் மேனியா 9.0 ஈரோடு, தொழில் முனைவோர் மாநாடு மற் றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிஐஐ-யங் இந்தியன்ஸ், நேட்டிவ் லீட் பவுண்டேசன்ஸ் மற்றும் கொங்கு பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து நவம்பர், டிசம்பர் - 2024 இல் மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் ஸ்டார்ட்அப் களுக்கான `ஸ்டார்ட்அப் மேனியா 9.0’ போட்டியை அறிவித்தது. 16 மாவட்டங்களில் உள்ள 41 கல்லூரிகளில் இருந்து, மாணவர் பிரிவின் கீழ் 250 யோசனை கள் பெறப்பட்டன. பட்டதாரி மற்றும் ஸ்டார்ட்அப் பிரிவின் கீழ் 7 மாவட்டங்களில் இருந்து 60 யோசனைகள் பெறப்பட் டன. இரண்டு சுற்று மதிப்பீடுகளுக்கு பிறகு, மாணவர் பிரி வின் கீழ் 17 யோசனைகளும், பட்டதாரி மற்றும் ஸ்டார்ட்அப் பிரிவின் கீழ் 6 யோசனைகளும் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக் கப்பட்டன. இறுதிச்சுற்று கொங்கு பொறியியல் கல்லூரி யில் ஞாயிறன்று நடைபெற்றது. இதில், பிரிவுவாரியாக வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். எக்கோ ப்ரொ டெக்ஷன் என்ஜினீர்ஸ் பிரைவேட் லிமிடெட் யின் நிறுவனர் சி. சந்திரசேகரன், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒரு லட்சம் மதிப்புள்ள ரொக்கப்பரிசினை வழங்கினார். ஸ்டார்ட்அப் மேனியா வின் முந்தைய 8 பதிப்புகளின் வெற்றி யாளர் மற்றும் தொடர்ந்தோர் மூலம் இதுவரை 13 காப்பு ரிமைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 7 புதிய நிறுவனங் கள் தொடங்கப்பட்டுள்ளன. 13 விருதுகள் பெற்றதுடன் மேலும் ரூ.330 லட்சம் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்துள்ள னர்.