திருப்பூர், ஜன.29- ஊத்துக்குளி வட்டம் நடுப்பட்டி ஊராட்சிக்கு உட் பட்ட புலவர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில், ஈரோட்டில் இருந்து திருப்பூ ருக்கு செல்லும் பேருந்து களை நிறுத்திச் செல்ல நட வடிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி னர். புலவர்பாளையம் பேருந்து நிறுத்தம் அரு கில் செவ்வாய்க்கிழமை காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஊத்துக்குளி தாலுகா குழு உறுப்பினர் க.பிரகாஷ் தலைமையேற்றார். புலவர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் வேகத்தடை அமைக்க வேண்டும், இங்குள்ள நிழற்கு டையை நிதி ஒதுக்கி சீரமைத்து தர வேண் டும், ஈரோட்டில் இருந்து திருப்பூருக்கு செல் லும் பேருந்துகளை புலவர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்க தாலுகா செயலாளர் எஸ்.கே. கொளந்தசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா குழு உறுப்பினர் வி.காமராஜ் ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசி னர். இதில் கிராம மக்கள், கட்சி உறுப்பி னர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் கட்சி கிளைச் செயலாளர் செ. ராசப்பன் நன்றி கூறினார்.