districts

img

கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு: குடிநீர் வீண்!

உடுமலை, பிப்.16- உடுமலை பகுதியில் கூட் டுக்குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருவதால், பொது மக்கள் கவலையடைந்துள் ளனர். திருமூர்த்தி அணையில் இருந்து திருப்பூர் மாவட் டத்தின் உடுமலைப்பேட்டை குடியிருப்பு மற்றும் குடிமங்க லம் ஒன்றியத்தின் 158 குடி யிருப்பு பகுதிகள், மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இருக்கும் 318 குடியிருப்பு பகுதி கள், கணியூர், சங்கரமநல்லூர், கொமரலிங் கம் மற்றும் தளி பேரூராட்சிகளின் குடிநீர் தேவைக்கு என தினமும் சுமார் 44 மில்லி யன் லிட்டர் தண்ணீர் அணையில் இருந்து எடுக்கப்பட்டு, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. அணையில் போதிய தண் ணீர் இருந்தாலும், ஊராட்சிப் பகுதிகளில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்படுவதால், தினமும் எதா வது ஒரு பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் குழாய்கள் உடைத்து தண்ணீர் வீணாகி வருவது அனைவரையும் கவலை யடைய செய்துள்ளது. இந்த குழாய்கள் உடைத்து இரண்டு வருடங்களுக்கு மேலான  நிலையில், பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லாமல் உள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய ஊழி யர்களிடம் கேட்டபோது, அணையிலிருந்து பொது மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முன்பு வாரியத்தின் ஊழியர்கள் இருந் தார்கள். ஆனால், தற்பொழுது குழாய்கள்  பராமரிப்பு மற்றும் விநியோகம் செய்யும் பணி  தனியார் நிறுவனங்களுக்கு விடப்பட்டுள் ளது. குறைவான எண்ணிக்கையில் வேலை  ஆட்களை வைத்து வேலை செய்வதால் தான் குடிநீர் பிரச்சனை வருகிறது, என்ற னர்.  மக்களின் அடிப்படை தேவையான குடி நீர் வழங்குவதை சேவையாக கருத வேண் டிய பணி, தனியார் நிறுவனங்களுக்கு போன தால் லாப நோக்கில் பரமரிப்பு வேலை களுக்கும், விநியோகம் செய்ய குறைவான ஆட்களை வைத்து வேலை செய்வதால் செயற்கையான குடிநீர் பற்றாக்குறை ஏற்படு கிறது. எனவே, திருமூர்த்தி அணையில் இருந்து மக்களுக்கு தரப்படும் அனைத்து குடி நீர் விநியோகம் மற்றும் குழாய் பராமரிப்பு களை மீண்டும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமே நடத்தினால் மட்டுமே பிரச்ச னைக்கு தீர்வு ஏற்படும், என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.