districts

img

குமாரபாளையம் காவிரிப் பாலத்தில் பொறியாளர்கள் ஆய்வு

நாமக்கல், பிப்.16- குமாரபாளையம் வழியாக செல் லும் காவிரி ஆற்றில் மேல் கட்டப் பட்டுள்ள மேம்பாலத்தில், பொறி யாளர்கள் சனியன்று ஆய்வு செய் தனர். நாமக்கல் மாவட்டம், குமார பாளையம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில், ஈரோடு மாவட்டம்,  பவானி நகரத்தை இணைக்கும் பழைய காவேரிப் பாலம் 1849 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட் டப்பட்டது. காவிரி ஆற்றின் மீது வாகனப் போக்குவரத்துக்காக கட் டப்பட்ட முதல் பாலமாக இது கருதப் படுகிறது. 175 ஆண்டுகளை கடந்த நிலையில், இந்த பாலத்தில் தற் போது கனரக வாகனப் போக்குவ ரத்து தடை செய்யப்பட்டு, கார்கள் இருசக்கர வாகனங்களை மட்டும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும்போதெல்லாம், இந் தப் பாலத்தை வெள்ளம் தாக்கு பிடிக்குமோ என்ற அச்சம் பொது மக்களுக்கு இருந்து வந்தது. பாலத் தின் உறுதி தன்மை குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டு பொறியாளர் கள் குழுவினர் தரப் பரிசோதனை செய்தனர். இதையடுத்து மீண்டும்  சனியன்று பாலத்தின் உறுதித் தன்மை குறித்து பரிசோதிக்கப்பட் டது. நெடுஞ்சாலைத்துறையின் கண்காணிப்பு பொறியாளர் சசி குமார், கோட்டப் பொறியாளர் குணா, உதவி கோட்டப் பொறியாளர் உள் ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழு வினர் இந்த பணியை மேற்கொண் டனர். பழைய காவிரி ஆற்றுப்பா லத்தில் உள்ள 26 தூண்களும், வலு வாக இருப்பதாக பொறியாளர் குழு வினர் உறுதி செய்துள்ளனர். தற்போது மிக குறைந்த அளவி லான போக்குவரத்து இந்த பாலத் தில் உள்ள நிலையில் இதே நிலை  தொடரட்டும் என அவர்கள் பரிந்து ரைத்துள்ளனர். பாலத்தின் இருபுற மும் செடிகொடிகள் வளராமல் அவ் வப்போது அப்புறப்படுத்தி கனரக வாகனங்கள் செல்வதற்கு தொடர்ந்து தடை விதிக்கலாம் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குமாரபாளையம் பவானி பேருந்து நிலையத்தை இணைக்கும் வகை யில் கட்டப்பட்ட புதிய பாலத்தின் உறுதி தன்மை குறித்தும் அதிகாரி கள் சோதனை செய்தனர்.