ஈரோடு, பிப்.16- ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும், என தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியு றுத்தியுள்ளது. சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் ஈரோடு மின்பகிர்மான வட்டக்கிளையின் 29 ஆவது மாநாடு, ஞாயிறன்று ஈரோடு வி.பி.சிந்தன் நினைவகத்தில், எம்.என். சிவசங்கரன் நினைவரங்கில் நடைபெற்றது. உதவித்தலைவர் கே.ஆர்.சண்முகம் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். திட் டத் தலைவர் எம்.ஆர்.பெரியசாமி தலைமை வகித்தார். பெருந்துறை கோட்டச் செயலாளர் வி.ஏழுமலை வரவேற் றார். மாநில துணைத்தலைவர் வி.இளங்கோ துவக்கவுரை யாற்றினார். கிளைச் செயலாளர் பி.ஸ்ரீதேவி, பொருளாளர் ஏ.விஸ்வநாதன் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். மாநிலச் செயலாளர் சி.ஜோதிமணி வாழ்த்திப் பேசினார். மாநில துணைத்தலைவர் ஆர்.குருவேல் சிறப்புரையாற்றி னார். இம்மாநாட்டில், மின்துறையை பொதுமக்களின் நல னுக்காக பொதுத்துறையாகப் பாதுகாக்க வேண்டும். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு அமைச்சரின் வாக்குறுதியின் படி, நியமன உத்தரவு வழங்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிட வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஈரோடு பகிர் மான வட்டக்கிளையின் தலைவராக சி.ஜோதிமணி, செயலா ளராக பி.ஸ்ரீதேவி, பொருளாளராக ஏ.விஸ்வநாதன், துணைத் தலைவர்களாக 9 பேர், துணைச்செயலாளர்களாக 10 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டது. முடி வில், தெற்கு கோட்டத் தலைவர் என்.பழனிசாமி நன்றி கூறி னார்.