districts

img

மாணவர், மாதர், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், பிப்.25- அனைத்து கல்வி வளா கத்திலும் உட்புகார் குழு அமைக்க வேண்டும், என  வலியுறுத்தி மாணவர், மாதர், வாலிபர் சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பாலியல் குற்றங்கள் ஏற் படும் போது காவல்துறை தாமதமின்றி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின குழந்தைகள் பாலியல் வன் கொடுமைக்குள்ளாகும் போது காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் வழக் குப்பதிவு செய்வதோடு மட்டுமின்றி, எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்  நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாண வர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாதர் சங்க மாவட் டத் தலைவர் ஆர்.வைரமணி தலைமை வகித்தார். இதில் மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் சே.பவித்ரன், மாதர் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்டப் பொருளாளர் கே.பெருமா, வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் வி.பெரிய சாமி, பொருளாளர் எம்.வெற்றிவேல் உட் பட பலர் கலந்து கொண்டனர்.