திருப்பூர், ஜன. 9 - கால்நடைகளை இழந்த விவசாயி களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி வரும் ஜன.23 ஆம் தேதி காங்கேயத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப் பூர் மாவட்டக்குழு கூட்டம் வியாழனன்று பல் லடம் அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் எஸ். ஆர்.மதுசூதனன் தலைமையில் நடை பெற்றது. மாநில துணைத்தலைர் பி.டெல்லி பாபு, மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் உள் ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற் றனர். இதில், திருப்பூர் மாவட்டத்தில் காங்கே யம், ஊத்துக்குளி, தாராபுரம் தாலுகா உட்பட மாவட்டம் முழுவதும் தெருநாய்கள் வெறி நாய்களாக மாறி கிராமங்களில் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, கன்று குட்டிகளை கடித்துக் கொன்று வருகின்றன. கடந்த 5 மாதங்களில் மட்டும் 300க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழி கள் வெறிநாய்களால் கடித்து கொல்லப்பட் டுள்ளன. இதனால் விவசாயிகளின் பொருளாதா ரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கால் நடை வளர்ப்போர் மன உளைச்சலுக்குள் ளாகி உள்ளனர். எனவே இறந்த கால்நடைக ளுக்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தெருநாய்களை கட்டுப் படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியும் நடவ டிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கால்ந டைகளை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், தெரு நாய்களை கட் டுப்படுத்தவும் வலியுறுத்தி ஜன.23 ஆம் தேதி காங்கேயத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.