சேலம், டிச.22- பெரமனூர் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் உதவி காவல் ஆணையரிடம் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், பெரமனூர் பகுதியில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடுகளை நோட்டமிடுவது, இருசக்கர வாகனங்களை திருடுவது, வீட்டின் கதவுகளை தட்டுவது போன்றவைகள் நடைபெற்று வருகின்றன. எனவே, அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும். இரவு நேரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண் டும், என வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் கையெழுத் திட்ட புகார் மனுவை மார்க்சிஸ்ட் கட்சியினர் சூரமங்கலம் சரக காவல் உதவி ஆணையரிடம் வழங்கினர். மனு அளிக்கை யில், சிபிஎம் வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார், கமிட்டி உறுப்பினர்கள் உடனிருந்தனர்.