districts

img

நகராட்சித் தலைவரைக் கண்டித்து சிபிஎம் போராட்டம்

சேலம், அக்.17- குடி நீர் வரவில்லை என புகார் தெரிவிக்க சென்றவரிடம், அவமரி யாதையாக பேசிய இடங் கணசாலை நகராட்சித் தலைவரைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி அலுவலகம் காடையாம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த கஞ்சமலை என்பவர், கடந்த மூன்று ஆண்டுகளாக எனக்கு சரிவர குடிநீர் இணைப்பில் வரவில்லை. அதற்கு பில் அனுப்பப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, நகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க சென்றிருந்தார். ஆனால், அங்கிருந்தவர்கள் மனுவை வாங்க மறுத்ததால், அவர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், வியாழனன்று அலுவலகத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கேட்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நகராட்சித் தலைவர் கமலக்கண்ணன், மார்க்சிஸ்ட் கட்சியினரிடமும் அவமரியாதையாக பேசியுள்ளார். மேலும், தவறான குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனால் ஆவேசமடைந்த மார்க்சிஸ்ட் கட்சியின் சங்ககிரி தாலுகாக்குழு உறுப்பினர் சீனிவாசன், கிளைச் செயலாளர் தியாகு மற்றும் ராஜா, கஞ்சமலை உட்பட பலர், நகராட்சித் தலைவரின் பேச்சை கண்டித்து, அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்த வந்த மகுடஞ்சாவடி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், கமலக்கண்ணன் மீது காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.