கோவை, ஜன.11- தொழில் நிறுவனங்களுக்கு கோவை மாநகராட்சி நிர்வாகம் தொழில் வரி செலுத்த நிர்பந்தம் கொடுப்பதாக வும், இதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கத்தினர் அர சுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோவையில் தொழில் நிறுவனங்க ளுக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் கொடுக்கப்படும் நெருக்கடி குறித்து, கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன் றத்தில் சனியன்று தமிழ்நாடு கைத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனை வோர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது, தமிழகத்தில் லட்சகணக் கான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சமீபகாலமாக சிறு, குறு தொழில்கள் கடும் நெருக் கடியை சந்தித்து வருகிறது. ஏற்கனவே, மின்கட்டணம் கடுமையான சுமையாக இருக்கின்றது. மின்துறையில் பவர் பேக்ட் முறையும் சிறு, குறு தொழில் துறையினருக்கு கூடுதல் சுமையை ஏற் படுத்தி இருக்கின்றது. இந்த சூழலில் கோவையில் தொழில் வரி செலுத்த வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் அவுட்சோர்சிங் மூலம் ஆட்களை நிய மித்து தொழில் வரி வசூல் செய்கின்ற னர். தொழில் வரி வசூல் செய்ய வரும் நபர்கள் விண்ணப்பத்தை உடனே பூர்த்தி செய்து தொழில் வரி உடனே கட்ட வேண்டும் என நிர்பந்திக்கின்ற னர். எந்த ஆண்டு தொழில்கள் துவங்கி யது என கேட்டு அதில் இருந்து தொழில் வரி கட்டச் சொல்லி தொழில் முனை வோரை அச்சுறுத்தி வருகின்றனர். மாந கராட்சி நிர்வாகத்தின் இந்த அச்சுறுத் தல் நடவடிக்கையால் சிறு, குறு தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் வரி, ரன்னிங் லைசென்ஸ் ஆகியவை குறித்து கோவை மாநகராட்சியால் கடு மையான நெருக்கடி கொடுக்கப்படு கின்றது. வரி விதிப்பு குறித்து அரசு உண்மை நிலையை கண்டறிய வேண் டும். தொழில் துறையினர் மீதான கெடு பிடிகளை கைவிட வேண்டும். மாநக ராட்சி ஆணையாளர் உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் அலுவகத்தை வரும் 21 ஆம் தேதியன்று சிறு, குறு தொழில் துறையினர் பெருந்திரளாக சென்று ஆணையரை சந்தித்து முறை யிட இருக்கின்றோம். அரசுக்கு வரு வாய் தரும் சிறு, குறு தொழிலை அழித்து விடக்கூடாது. அவுட்சோர்சிங் முறையில் தொழில் வரி வசூல் செய் வதை நிறுத்த வேண்டும். அரசின் நட வடிக்கையால் சிறு தொழில்கள் அழிந்து பெருந் தொழில்களுக்கு மட்டுமே இது தொழில் செய்ய வழிவகுக்கும், ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழப்பால் பாதிக்கப்படுவார்கள். முதல்கட்டமாக முறையிடல் 21 ஆம் தேதியன்று நடத்த இருப்பதாக வும், அதை தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்ப டும் எனவும், சிறு, குறு தொழில் முனை வோரின் கோரிக்கைகளை 100 வார்டு களில் உள்ள கவுன்சிலர்களுக்கும் கடித மாக கொடுக்க இருப்பதாகவும் தெரி வித்தனர்.