திருப்பூர், டிச.22- திருப்பூர் மாநகராட்சி வளர்மதி அருகே சுரங்கப்பாலம் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் தெற்கு மற்றும் வடக்கு தொகு திகளை இணைக்கக்கூடிய பிரதான சாலை குமரன் சாலை. இதில், தினசரி ஆயிரக்கணக் கான வாகனங்கள் வந்து செல்கிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது வளர்மதி அருகே நிலவும் போக்குவ ரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சுரங் கப்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பணிகள் கிடப்பில் போடப் பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் எதுவும் நடக்காத நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் இப்பணிகளுக்காக மறு மதிப்பீடு செய்து ரூ. 22 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும், 2025 ஆம் ஆண்டு சுரங்க பாலத்தை பயன்பாட் டிற்கு கொண்டு வரும் வகையில் சுரங்க பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சனியன்று சுரங்கப் பாலம் அமைகின்ற இடத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மாற்றம் செய்யும் பணி நடைபெற்றது. எம்ஜிஆர் சிலை அருகே இருந்த டிரான்ஸ்பார்மரை மின்வாரிய ஊழி யர்கள் கிரேன் உதவியுடன் அகற்றி, சுரங்கப் பாலம் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அருகிலேயே மாற்றி வைத்தனர். இதனால், அப்பகுதியில் சனியன்று மின்தடை செய்யப்பட்டது. மேலும், மாநகராட்சியில் இருந்து வளர்மதி வழியாக பூங்கா சாலை செல்லும் வழியில் பணிகள் முடியும் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது. டிரான்ஸ்பார்மர் இடமாற்றம் செய்யப்பட்ட பிறகு போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.