ஈரோடு, அக்.4- இலக்கிம்பூர் கேரி தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. சென்னிமலையில் நடைபெற்ற நிகழ்விற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட துணைத்தலை வர் எஸ்.பொன்னுசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அர்ஜுனன்,புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன் மற்றும் கவி, பெரியார் பெண்கள் அமைப்பின் கனிமொழி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி கி.வே.பொன்னையன், இராமசாமி உள்ளிட்ட அனைவரும் கையில் சுடரேந்தி, வீரவணக்கம் செலுத்தினர். இதேபோல் பவானி வட்டம், வலையக்காரன் பாளையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.எஸ்.பழனிச்சாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகாச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சி.எம்.துளசிமணி, பழங்குடி மக்கள் சங்கத்தின் தலைவர் வி.பி.குணசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஆர்.நல்லமுத்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கந்தசாமி,டி.ஏ.மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அந்தியூர் வட்டம் கள்ளிமடை குட்டை யில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தாலுகாப் பொருளாளர் ஆர்.கணேசன் தலைமை வகித்தார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார்.