districts

கோவை முக்கிய செய்திகள்

மோசமான நிலையில் கோவை நகரச்சாலைகள்

கோவை, நவ.26- சூயஸ் மற்றும் பாதாளச்சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கப்படாத தால் நகரச்சாலைகள் மிக மோசமாக உள் ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண் டும் என செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கட்சி யினர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். சிபிஎம் கோவை கிழக்கு நகரக்குழுவின் சார்பில், மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஆகியோரிடம் அளித்த மனுவில் தெரி வித்திருப்பதாவது, கோவை நகரம் முழுவ தும் சூயஸ் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் சரி செய்யபடாமல் குண்டும் குழியுமமாக மிக மோசமாக உள்ளது.

இதனால், அதிக விபத்து கள் நடைபெறுகிறது. எனவே போர்கால அடிப்படையில் சாலைகளை சீரமைக்க வேண்டும். இதேபோன்று, கிக்கானி பள்ளி  முதல் வடகோவை சிந்தாமணி வரை சாலை யின் மத்தியில் தடுப்பு சுவர் மற்றும் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். தெரு நாய்களை கட்டுபடுத்த வேண்டும். தூய்மைப்  பணியாளர்களுக்கு குறிப்பாக பெண் தூய் மைப் பணியாளர்களுக்கு கழிப்பிட வசதி இல் லாததால் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, அவர்கள் சூழ்நிலையை அறிந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு அனைத்து  வார்டுகளிலும் கழிப்பிட வசதி செய்து தர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் சிபிஎம் கோவை கிழக்கு நகரச் செய லாளர் என்.சுபாஷ், நகரக் குழு உறுப்பினர் கள் எம்.எம்‌.ராஜன், மாணிக்கவாசகம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

7 மாத பெண் குழந்தை சடலமாக மீட்பு

மேட்டுப்பாளையம், நவ.26- மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் நீர் மின் உற்பத்தி கதவணையில் 7 மாத பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வெள்ளிப்பாளையம் பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே நீர் மின் உற்பத்தி  கதவனை (செக் டேம்) அமைந்துள்ளது. இந்த கதவணைப் பகுதியில் குழந்தையின் சட லம் ஒன்று இருப்பதாக மேட்டுப்பாளையம் காவல் துறையினருக்கு பொதுமக்கள் தக வல் தெரிவித்தனர். இதனையடுத்து பவானி  ஆற்றின் உள்ள கதவணைப் பகுதியில் சேற்றில் சிக்கிய நிலையில் இருந்த குழந்தையின் உடலை மீட்டனர். பின்னர், ஆம்புலன்ஸ் ஓட்டு நர்கள் உதவியுடன் மீட்ட காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். முதற்கட்ட விசாரணையில் மீட்கப் பட்ட உடல் பிறந்து 7 மாதமான பச்சிளம் பெண் குழந்தை என தெரிய வந்தது. இதனைத்  தொடர்ந்து போலீசார் குழந்தையின் உடலை  உடற்கூறாய்விற்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலப்பிரச்னைக்கு தீர்வு: அதிகாரிகள் குழு அறிக்கை

உதகை, நவ.26- கூடலூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிக ளில் உள்ள நீண்ட நாள் நிலப்பிரச்னைக்கு தீர்வு  செய்ய. அதிகாரிகள் குழு  ஆய்வு  செய்து தளர்வு செய்வதற்கான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்த லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட கால மாக நிலப்பிரச்சனை நிலவி வருகிறது. இதில், குறிப்பாக  டிஎன்பிபிஎப், டிடிசிபி உள்ளிட்ட  நிலம் தொடர்ந்து இருக்கிறது. இதனால், அங்கு  பத்திரப்பதிவு செய்வதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு, நிலம் வாங்கவும் விற்கவும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு தீர்வு காண வேண்டும் என அரசி யல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் போராட் டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் இதுவ ரைக்கும் தீர்வு ஏற்படாமல் உள்ளது. மேலும்,  சந்தை மதிப்பு மிகக் குறைவாக உள்ள பூமி களுக்கு மிக மிக அதிகமாக வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்து அதன் காரணமாக பதிவு செய்ய  முடியாமல் சிரமப்படுகின்றனர். உண்மை யான மதிப்பை குறிப்பிட்டு ஆவணத்தை சமர்ப் பித்தால்  சட்டப்படி அந்த ஆவணத்தை பதிவு செய்த பிறகு முத்திரை சட்டம் பிரிவு 47A1 இன் கீழ் மேல் நடவடிக்கைக்காக அனுப்பலாம். ஆனால், கடந்த ஒரு சில வருடங்களில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் பதிவு சட்ட விதி களுக்கு முரணாக பதிவு செய்யப்பட்டதாக கூறி நூற்றுக்கணக்கான ஆவணங்களை குறிப்புரை எழுதி வைத்துள்ளதாகவும், அத்த கைய ஆவணங்கள் செல்லாது என்றும் சார் பதிவாளர்கள் குற்றச்சாட்டு இருந்து வருகி றது. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சீர் செய்வதற் காகவும், நிலத்தில் உள்ள ஒரு சில பிரச்னை களை தளர்வு செய்து, எளிய முறையில் பதிவு செய்து அரசுக்கு இழப்பு ஏற்படாத விதமாக அதிகாரிகள் கொண்டக் குழு ஆய்வு செய்து  அரசுக்கு அறிக்கை அனுப்பும்படி கூறப்பட் டது. அதன் பேரில் அதிகாரிகள் குழு  ஆய்வு செய்து தளர்வு செய்வதற்கான அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.