districts

img

கோவை தொழில் அமைப்பினர் தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

கோவை, ஏப்.8- சென்னை தலைமை செயலகத்தில் கோவை தொழில் அமைப்புகளின் நிர்வாகி கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந் தித்து பல்வேறு கோரிக்கைகளை மனுக் களாக அளித்தனர். குறுந்தொழில் முனைவோர்களின் நலன் கருதி கோவையில் குறுந்தொழில் பேட்டை அமைக்க வேண்டும். மூலப்பொருள் விலை யேற்றத்தை தடுக்க ஒன்றிய அரசை வலியு றுத்த வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோவை தொழில் அமைப்பினர் வெள்ளியன்று தலைமை செயலகத்தில் வழங்கினர்.  அப்போது, கொடிசியா தலைவர் ரமேஷ் பாபு, சியா தலைவர் கார்த்திக், டேக்ட் தலை வர் ஜேம்ஸ், டான்சியா துணை தலைவர் சுருளி வேல், காட்மா தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் தமோதரன் ஆகியோர் உடனி ருந்தனர்.