திருப்பூர், ஜன.29 - திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக் கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார். திருப்பூர் மாநகர காவல் ஆணையராக ராஜேந்திரன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றார். தொடர்ந்து மாநகரின் பல் வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டிய பகுதிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு கள் மற்றும் செய்யப்பட வேண்டிய மாற்றங் கள் குறித்து புதன்கிழமை நேரில் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். தினந்தோறும் ஆயிரக்கணக்கான புறநோ யாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏராள மான பார்வையாளர்கள் தொடர்ந்து வந்து செல்லும் நிலையில், உள்ளே நோயாளி கள் வரும் வழி, வெளியே செல்லும் வழி, பச்சி ளம் குழந்தைகள் பிரிவு, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆய்வு மேற் கொண்டார். மேலும் மருத்துவமனை வளா கம் முழுவதும் சுற்றி பார்த்து காவலர் அறை யில் உள்ள காவலர்கள் எண்ணிக்கை குறித் தும் ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடு கள், அதிகப்படுத்த செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் முருகேசனிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மருத்துவர்கள் காவல் துறையினர் மற்றும் மருத்துவர் அலுவ லர்கள் உடன் இருந்தனர்.