districts

img

நகர்ப்புற உள்ளாட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு போனஸ் கோரி திருப்பூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 23 - திருப்பூர் மாநகராட்சி மற்றும் இம்  மாவட்டத்தில் உள்ள ஆறு நகராட்சிக ளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை  செய்யும் தினக்கூலி தொழிலாளர்க ளுக்கு சட்டப்படி போனஸ் வழங்க வலி யுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு ஆர்ப்பாட்டம் நடத்தியது.  திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு உள்ளாட் சித் துறை ஊழியர் சம்மேளனக்குழு உறுப்பினர் சங்கர் குமார் தலைமை ஏற்றார்.  திருப்பூர் மாநகராட்சி, உடுமலை,  தாராபுரம், பல்லடம், காங்கேயம், வெள் ளக்கோவில் மற்றும் திருமுருகன் பூண்டி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி களின் தூய்மைப் பணியாளர்கள், வாகன  ஓட்டுநர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணி யாளர்கள் என ஒப்பந்த அடிப்படையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தினக் கூலி தொழிலாளர்கள் வேலை செய்து  வருகின்றனர்.  தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் இந்த தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது குறித்து ஒப் பந்த நிறுவனத்தார் மௌனம் காக்கின்ற னர். எனவே இந்த தொழிலாளர்களுக்கு  சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும்,  அதற்கு உள்ளாட்சி நிர்வாகங்கள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  இப்போராட்டத்தை விளக்கி திருப் பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள் ளாட்சித் துறை ஊழியர் சங்க செயலா ளர் கே.ரங்கராஜ், சிஐடியு மாவட்டத்  துணைத் தலைவர் கே.உண்ணிக்கிருஷ் ணன் ஆகியோர் உரையாற்றினர். சிஐ டியு திருப்பூர் மாவட்டத் தலைவர் சி. மூர்த்தி வாழ்த்தி பேசினார். இதில் திருப்பூர் மாநகராட்சி மற்றும்  மாவட்டம் முழுவதும் உள்ள நகராட்சிக ளில் இருந்து பெண்கள் உட்பட 200க்கும்  மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.