திருப்பூர், டிச.31- சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் மின்சார துறையை தனியார் மய மாக்கும் பாஜக அரசின் நடவடிக்கை யைக் கண்டித்து செவ்வாயன்று திருப் பூரில் சிஐடியு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாஜக ஆளும் சண்டிகர் மற்றும் உத் தரபிரதேச மாநிலத்தில், அரசு மின் விநி யோக நிறுவனங்களை தனியார்மய மாக்க அந்த மாநில பாரதிய ஜனதா அரசு தீவிரமாக இறங்கியுள்ளன. குறிப்பாக சண்டிகர் மின்சாரத் துறை லாபகரமாக செயல்பட்டும், வெறும் ரூ.174.63 கோடிக்கு எமினென்ட் எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (இஇடிஎல்) என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது. இதைக் கண்டித்து, டிசம்பர் 6ஆம் தேதி சண்டிகர் மின்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். டிசம்பர் 25ஆம் தேதி சண்டிகர் மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் பொதுக் கூட்டம் நடத்தினர். மேலும், சண்டிகர் மின் ஊழி யர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்து, 37 நாட்களாகப் போராடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து மின் ஊழியர்களுக்கு ஆதர வாக சிஐடியு நாடு முழுவதும் போராட் டம் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதி யாக திருப்பூர் குமரன் சிலை முன்பு சிஐ டியு மாவட்ட துணைத் தலைவர் பி. பாலன் தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், மின் ஊழி யர் மத்திய அமைப்பு செயலாளர் ராம லிங்கம், சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, சிஐடியு கட்டுமானத் தொழிலா ளர் சம்மேளன மாநில பொதுச்செய லாளர் டி.குமார், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநிலத் தலை வர் பி.முத்துசாமி, சிஐடியு அரசு போக்கு வரத்து ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் பி.செல்லதுரை, சிஐடியு சுமைப் பணி தொழிலாளர் சங்க மாவட்டத் தலை வர் ராஜகோபால், பொருளாளர் டி. ஜெயபால் உள்பட திரளானோர் பங் கேற்றனர்.