districts

img

மாதர், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.18- தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் அத் தியாவசிய உணவுப் பொருட் களை நியாயமான விலை யில் ரேசன் கடை மூலம் விநி யோகம் செய்ய வலியுறுத்தி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருப்பூர் ஒன்றியம், முத லிபாளையம் ஊராட்சி, பொன்னாபுரம் ரேசன் கடை முன்பு வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பெட் ரோல், டீசல், எரிவாயு விலைகளை குறைப் பதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட் களை ரேசன் கடைகள் மூலம் அனைத்து மக்க ளுக்கும் நியாயமான விலையில் வழங்குவ தற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும், என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி னர். முடிவில் ரேஷன் கடை அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதில், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஜி.சிந்தன், துணைச் செயலாளர் ஆசிக், மாதர் சங்க நிர்வாகிகள்  எஸ்.ஜானகி, வி.ஜானகி, எம்.உஷா, கே.நீலா வதி, முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப் பினர் மணி ஆகியோர் பங்கேற்றனர்.