districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தால், பட்டியலின மக்களின் மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு

நாமக்கல், ஜன.29- மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத் தால், ஆனங்கூர் ஊராட்சிக்குட்பட்ட பட்டியலின மக்களின் மயானத்திற்கு இடம் ஒதுக்கீடு செய்யப் பட்டது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் மற்றும் டி.எம்.காளியண்ணன் நகர் பகுதி யில் முறையான மயான வசதி இல்லை. இப்பகுதி யில் 500க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தி னர் வசித்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின்  சடலங்களை ரெடிமேட் தகன மேடை மூலமாக எரிப்பது, வேறு ஊர்களுக்கு கொண்டு சென்று எரிப்பது அல்லது புதைப்பது போன்ற அவல நிலை தொடர்ந்து பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. எனவே, தங்களுக்கென்று முறையான மயான வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினருடன் இணைந்து அப்பகுதி மக்கள் தொடர்ச்சி யாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த னர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆனங்கூர் சாலை யில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைய டுத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, மயானத்திற்கு இடம் ஒதுக்கப்படும் என அரசு அதிகாரிகள் உறுதி அளித்திருந்த நிலையில், ஆனங்கூரிலிருந்து சின்ன ஆனங்கூர் செல்லும் வழியில் புளியம்பட்டியாபாளையம் பகுதியில் மயான இடம் ஒதுக்கபட்டது. இதனால் பட்டிய லின மக்களின் 50 ஆண்டுகால அவல நிலை நீங்கியது. இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்க  சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் பகுதியில் மயா னம் அமைக்கக்கூடாது என பல்வேறு இடர்பாடு களை அளித்த போதிலும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தொடர் போராட்டத்தின் காரணமாக மயானத்திற்கென இடம் ஒதுக்கியதை அதிகாரி கள் உறுதி செய்தனர். இந்நிலையில், ஆனங்கூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் சின்னசாமி (72) உயிரிழந்த நிலையில், அவருடைய உடல் மயா னத்திற்கு என அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட இடத் தில் வைத்து எரியூட்டப்பட்டது. நீண்ட பல காலங்க ளுக்குப் பிறகு மயானம் உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.