புதுதில்லி, பிப்.16- புதிய வருவாய்ப் பங்கீட்டு முறைப் படி நிலுவைத் தொகையை செலுத்தாத தொலைத்தொடர்பு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் 4 லட்சம் கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவின்படி 10 ஆயி ரம் கோடி ரூபாயை பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் செலுத்தி விடுவதாக ஏர் டெல் நிறுவனம் உறுதியளித்துள்ளது. தொலைத்தொடர்பு சேவை வழங்கிவரும் 15 நிறுவனங்கள் உரிமக் கட்டணமாக 92 ஆயிரத்து 642 கோடி ரூபாயும், அலைக்கற்றை பயன் பாட்டுக்காக 55 ஆயிரத்து 54 கோடி என மொத்தம்ஒரு லட்சத்து 47 லட்சம் கோடி செலுத்தவேண்டியுள்ளது. இதில், அதிகபட்சமாக, வோடபோன் ஐடியா நிறுவனம் 53 ஆயிரத்து 38 கோடியும், பார்தி ஏர்டெல் நிறுவனம் 35 ஆயிரத்து 586 கோடியும் நிலுவை வைத்துள்ளன. இந்த நிலுவைத் தொகையை ஜனவரி 20 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்க னவே உத்தரவிட்டிருந்தது. நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு உத்தர விட்டிருந்தும் அதனை மதிக்காத தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கு நீதிபதிகள் கடும் கண்ட னத்தை தெரிவித்தனர். இதையடுத்து, நிலுவைத் தொகை யை உடனடியாக செலுத்துமாறு தொலைத் தொடர்புச் சேவை நிறு வனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை சுற்றறிக்கை அனுப்பியது. இந்நிலையில் பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி விடுவதாகவும், எஞ்சிய தொகையை மார்ச் 17 ஆம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் பார்தி ஏர் டெல்நிறுவனம் பதிலளித்துள்ளது. டாடா நிறுவனம் மார்ச் 17 ஆம் தேதிக்குள் முழுத் தொகையையும் செலுத்தி விடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால், வோடபோன் ஐடியா நிறுவனம், நிலுவைத் தொகையை உடனடியாக ஒரே தவணையில் செலுத்துமாறு தங் களைக் கட்டாயப்படுத்தினால் நிறு வனத்தை மூட வேண்டியிருக்கும் என்று கடந்த மாதமே தெரிவித்தி ருந்தது.