உடுமலை, ஜன.4- வருவாய்துறையின் தவறான பதி வால் 5 ஆண்டுகளுக்கு மேலாக சிரமத் திற்கு உள்ளாகும் அடிவள்ளி கிராம மக் கள், காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். குடிமங்கலம் ஒன்றியம் அடிவள்ளி கிராமத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்ய முடியாமல் உள்ளன. இதுகு றித்து பதிவுத்துறை அலுவலகத்தில் கேட்டால், அடிவள்ளி கிராமம் முழுவ தும் நீர் நிலைப்பகுதி என வருவாய்த்து றை ஆவணத்தில் உள்ளதாக தெரி விக்கின்றனர். இந்த அடிவள்ளி கிராமம் புல எண் 114/ எ1எ யின்படி மொத்தமாக 23.670 ஹெக்டேர் பரப்பளவு.இக்கிரா மத்தில் இருக்கும் புல எண் 279 ல் 55.04 ஹெக்டேர் பரப்பளவு குளம் மட்டுமே நீர் நிலைப்பகுதி. ஆனால் வரு வாய்த்துறை ஆவணத்தில் புல எண் 114/எ1எ முழுவதும் நீர்நிலை என தவறு தலாக பதியப்பட்டுள்ளது. இதனால், இந்த கிராமத்தில் இருக்கும் வீடு மற்றும் வீட்டுமனைகளை விற்கவோ, வங்கி யில் கடன் பெறவோ முடியவில்லை. வருவாய்த்துறையினர் தவறான பதிவை நீக்க வேண்டும் என பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோமங்கலம் பதிவுத் துறை அலுவலகத்திற்கு உட்பட்ட புதுப் பாளையம், தொட்டம்பட்டி, பண்ணை கிணறு, கோழிக்குட்டை மற்றும் ஜல்லி பட்டி ஆகிய கிராமங்களிலும் இதே போல் வருவாய்த்துறையின் தவறான பதிவுகளால், பத்திரப்பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறுகை யில், வருவாய்துறை அதிகாரிகளின் தவறான பதிவால், 5 ஆண்டுகளுக்கு மேல் எங்கள் பகுதியில் புதிய வீடு கள் வாங்கவோ, விற்கவோ முடிய வில்லை. வங்கிகளில் கடனும் பெற முடி யவில்லை. இதுகுறித்து உரிய அரசு அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உங்க ளைத்தேடி, உங்கள் ஊரில் திட்டம் உடுமலையில் நடைபெற்ற போது பொது மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல முறை உடுமலை வட் டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அனைத்து வருவாய்துறை அதிகாரி களிடமும் கோரிக்கை வைத்தும் நடவ டிக்கை இல்லை. கடந்த மாதம் 20 ஆம் தேதி உடுமலை அரசுக்கலைக்கல்லூ ரியில் வருவாய் கோட்டாட்சியர் என்.குமார் தலைமையில் நடைபெற்ற விவ சாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் அடி வள்ளி பொது மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை அதிகாரிகளின் தவறான பதிவால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் பிரச்சனையை தீர்க்க வேண் டிய அதிகாரிகளை கண்டித்தும், வரு வாய்துறையின் தவறாக நீர்வழி புறம் போக்கு என்ற பதிவை மாற்றித்தர வலி யுறுத்தி உடுமலை வட்டாட்சியர் அலு வலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரி வித்துள்ளனர்.