districts

img

போக்சோவில் கைதான மருத்துவரைக் காப்பாற்ற திட்டமா? சாட்சிகளைக் கலைக்க முயற்சிக்கிறதா ஈஷா மையம் ?

கோயம்புத்தூர், அக். 6- அரசுப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஈஷா நடமாடும் மருத்து வக்குழுவில் உள்ள மருத்துவர் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சாட்சிகளை கலைப்பதற்கு ஈஷா முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையம் மற்றும் அதன் நிறு வனர் ஜக்கி வாசுதேவ்வையும் சுற்றி சர்ச்சை களும், பிரச்சனைகளும் சுழல்வது வாடிக்கை யாக இருந்து வருகிறது. அந்த வகையில் அண்மையில், ஈஷா யோகா மையத்தை சேர்ந்த  மருத்துவர் மீது எழுந்த போக்சோ புகார் தொடர்பான விவகாரம் தற்போது பூதாகரமாகி உள்ளது. 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு  முன்பாக ஈஷா யோகா மையத்தில் என்ன  நடக் கிறது என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து கடந்த இரண்டு நாட்கள் கோவை மாவட்ட காவல் துறை மற்றும் சமூக நலத்துறை உள்ளிட்ட  அமைப்புகள் ஈஷா யோகா மைய மை யத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்ட னர். அப்போது அங்கு தங்கியிருந்தவர்களிடம் பல்வேறு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், அங்கிருந்தவர்களின் முந்தைய சூழல், தற்போது அவர்கள் இருக்கின்ற நிலை போன்றவற்றை விசாரித்து பதிவு செய்துள்ளனர். 

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு  

இதற்கிடையில், கடந்த சில தினங் களுக்கு முன் ஈஷா யோகா மையம் சார்பில்  மருத்துவர் ஒருவர் பேரூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட செம்மேடு பகுதியில் உள்ள ஒரு  பள்ளிக்கு யோகா பயிற்சிக்காக சென்றுள் ளார். அங்கிருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுக்கப் பட்டு அவர் மீது முதல் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தில் சோதனை எதுவும் செய்யக்கூடாது என அந்த மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவு பெற்றுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில் போக்சோ வழக்கு தொடர்பாக சாட்சிகளை பதிவு செய்ய நினைத்த போலீசார் கோவை மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்டிரேட்டிடம் அனுமதி கோரியிருந்தனர். அவரது உத்தரவின் பேரில் மேற்படி பள்ளி யில் இருந்து 9 பெண் குழந்தைகளிடம் வாக்கு மூலம் பதிவு செய்ய சூலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு வெள்ளியன்று ஆஜர்படுத்தினர். அவர்களிடம் நீதிபதி தனி அறையில் வைத்து பெண் குழந்தைகளின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

சாட்சிகளை விலை பேசும் ஈஷா 

அவ்வப்போது ஈஷா யோகா மையத்தில் சர்ச்சைகள் எழுவதும், இதன் மீது காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்வதும், பின்னர்,  அந்த சாட்சிகளை விலை பேசி சமாதானப் படுத்தி, ஏதும் இல்லாமல் செய்வதும் ஈஷா  மையத்தில் வாடிக்கையாக உள்ளது. இந்நிலை யில், தற்போது ஈஷா மருத்துவர் போக்சோவில் கைதாகி இருக்கும் சம்பவத்தில், இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் பேசி ஈஷா நிறுவனத்தை சேர்ந்த சிலரே மறை முகமாக வாகன ஏற்பாடு செய்து நீதிபதியிடம் அழைத்து வந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.