districts

img

அதிகாரிகளின் உத்தரவை மதிக்காத ஒப்பந்ததாரர்:

மேட்டுப்பாளையம், டிச.28- அரசு அதிகாரிகளின் உத்தரவை மதிக்காமல், இஎஸ்ஐ, இபிஎப் போன்ற வற்றை முறையாக செலுத்தாத ஒப்பந்த தாரரை கண்டித்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தூய் மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் நகராட்சியில் ஒப்பந்த தூய் மைப் பணியாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த தூய் மைப்பணி ஒப்பந்ததாரர் முறையாக சம் பளம் வழங்குவதில்லை. மேலும், தூய் மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய் யப்பட்ட இஎஸ்ஐ, இபிஎப் போன்ற  தொகைகளை முறையாக செலுத்துவ தில்லை. இதனையடுத்து, ஒப்பந்த தூய் மைப் பணியாளர்கள் வேலை நிறுத்த  போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந் தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு  வர கடந்த 18 ஆம் தேதியன்று மேட் டுப்பாளையம் வட்டாட்சியர் தலைமை யில் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர், காவல் துறையினர், தூய்மைப் பணியா ளர்கள் கலந்து கொண்ட பேச்சு வார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தையில் டிசம்பர் 26 ஆம் தேதியன்று தொழிலாளர்க ளுக்கு ஒப்பந்ததாரர் வழங்க வேண்டிய இஎஸ்ஐ, இபிஎப் தொகைகளை செலுத்தி விடுவதாக உறுதியளிக்கப் பட்டது. ஆனால், 26 ஆம் தேதி கடந்து தற்போது வரை தொழிலாளர்களுக்கு சம்பளத்தொகையையும் வழங்க வில்லை, பிஎப், இஎஸ்ஐயும் வழங்க வில்லை. இதனையடுத்து, அதிகாரி களின் உத்தரவை மதிக்காத சம்பந்தப் பட்ட ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக் குப்பதிவு செய்யவும் மேற்படி ஒப்பந் ததாரரிடம் இருந்து தொழிலாளர்க ளுக்கு வரவேண்டிய அனைத்துத் தொகைகளையும் பெற்று தர வேண்டி,  மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலு வலகத்தில் சிஐடியு ஒப்பந்த தூய்மைப் பணியாளர் சங்க தாலுகா செயலாளர் எஸ்.பாஷா தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனையடுத்து, வட்டாட்சியர் மற் றும் மேட்டுப்பாளையம் நகராட்சி சுகா தார ஆய்வாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை யில் மேற்படி ஒப்பந்ததாரருக்கு நக ராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்க இருப் பதாகவும், ஒப்பந்தம் ரத்து செய்வ தோடு ஒப்பந்ததாரரின் வைப்புத் தொகையில் இருந்தும் இம்மாத பணிக் கால தொகையினை இணைத்து தொழி லாளர்களுக்கு நகராட்சியின் சார்பில் வழங்குவதாக தெரிவித்தனர். மேலும், திங்கட்கிழமை வட்டாட்சியர் தலைமை யில் நகராட்சி அதிகாரிகள் உள்ளிட் டோர் கலந்து கொள்ளும் கூட்டம் ஏற் பாடு செய்து அந்த கூட்டத்தில் முடிவு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை ஏற்று தொழி லாளர்கள் கலைந்து சென்றனர்.