நல்லாறு திட்டம்: அமைச்சர் தகவல்
நல்லாறு திட்டம்: அமைச்சர் தகவல் கோவை, டிச.28- பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் 5 புதிய திட்டப்பணிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.10கோடி மதிப்பீட்டில் 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 4 முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் வெள்ளியன்று துவக்கி வைத் தார். இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப் பினர் க.ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத் ரின் சரண்யா, திருப்பூர் மண்டலக்குழு தலைவர் பத்ப நாபன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காணியப் பன், ஒன்றியகுழு உறுப்பினர், ஜோதிபாக சோலப் பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் விசாலாட்சி காணி யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகை யில், கொங்கு மண்டலத்தின் முக்கிய பாசன திட்டமான பரம்பிகுளம் ஆழியாறு திட்டம், தமிழ்நாடு அரசு மற்றும் கேரளம் அரசு ஒப்பந்தமிட்டு திட்டம் உருவாக்கப்பட்டது. நல்லாறு திட்டம் நிறைவேற்றுவது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர், கேரளம் முதலமைச்சருடன் பேசியுள் ளார்கள். தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பற்றாக்குறையாக இருக்கின்ற நீரினை பெற்று நம்மு டைய பகுதிகளில் பாசனங்களை மேம்படுத்தவதற்கு தேவையான சூழ்நிலைகள் உருவாக்கப்படும், என் றார்.
மாநகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல்: 4 பேர் மீது வழக்குப்பதிவு
நாமக்கல், டிச.28- நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதென, மாநக ராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் து.கலாநிதி தலைமையில், மன்ற கூட்டரங்கில் வெள்ளியன்று நடைபெற்றது. துணை மேயர் செ. பூபதி, ஆணையர் ரா.மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மாநகராட்சி அலுவலகத் திற்குள் புகுந்து அலுவலர்களிடம் தகராறில் ஈடுபட் டோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 11 ஆவது வார்டு உறுப்பினர் டி.டி.சரவணன் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஆணையர், துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் அளித்த புகாரின்பேரில், நான்கு பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள் ளது. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் இரண்டு தூய்மைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்திற்கு கடிதம் வழங் கப்பட்டுள்ளது, என்றார். இதையடுத்து 38 ஆவது வார்டு உறுப்பினர் ஈஸ்வரன் பேசுகையில், நாமக்கல் நக ராட்சியுடன் சில ஆண்டுகளுக்கு முன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளுக்கான புதை சாக்கடைத் திட்டப்பணி முடிவடையாமல் பல மாதங்களாக நடைபெற்று வரு கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர், என்றார். தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய வார்டுகளில் உள்ள பிரச்னைகளை எடுத்துரைத்தனர். அதன்பிறகு, அனைத்து மன்ற உறுப்பினா்களின் ஒப்பு தலுடன் மன்றக் கூட்டத்தில் 219 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முன்னதாக, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்
ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல் சேலம், டிச.28- ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட் டத்தை உருவாக்க வேண்டும், என சேலத்தில் நடைபெற்ற வரு வாய்த்துறை அலுவலர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் அருள் பிரகாஷ் தலைமையில் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில், சேலம் மாவட்டத்தை பிரித்து ஆத்தூரை தலைமை யிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண் டும். சேலம் கோட்டத்தை இரண்டாகப் பிரித்து வாழப் பாடியை தலைமையிடமாகக் கொண்டு புதிய கோட்டமும், ஆத்தூர் கோட்டத்தை இரண்டாக பிரித்து தலைவாசல் வட் டத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் கோட்டமும் உருவாக்க வேண்டும். மேட்டூர் வட்டத்தை இரண் டாக பிரித்து மேச்சேரியை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும். மக்கள் தொகை கணக் கிற்கேற்ப சேலம் வருவாய் அலகில் வட்டம், குறு வட் டம் கிராமங்களைப் பிரிக்க வேண்டும். பதிவரை எழுத் தர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். வருவாய்த்துறையில் தொடர்ந்து அதிக காலிப் பணி யிடங்கள் உள்ளதாகவும், இதனால் ஊழியர்கள் பற்றாக் குறையால் வேலைப்பளு அதிகரித்துள்ளது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி, புதிய மாவட்டம் மற்றும் கோட்டங்களை பிரித்து அரசு பணிகளை துரிதமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வஞ்சிக்கப்படும் வட்டமலை அணை
திருப்பூர், டிச. 28 – திருப்பூர் மாவட்டத்தில் சிறிய அளவான 300 மில்லியன் கனஅடி நீர்ப்பிடிக்கும் வட்ட மலை அணை வஞ்சிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். காங்கேயம் வெள்ளகோவில் வறண்ட பகுதியில் பாசன வசதிக்காக ஏற்படுத்தப் பட்ட இந்த அணை கடந்த 30 ஆண்டு காலமாக பயனற்று கிடக்கிறது என்று விவசாயிகள் கூறு கின்றனர். குறிப்பாக இந்த ஆண்டு அமராவதி, பரம்பிக்குளம் – ஆழியாறு தொகுப்பணை கள் என மேற்குத் தொடர்ச்சி மலை சார்ந்த அனைத்து அணைகளும் பல முறை நிரம்பி யுள்ளன. உபரிநீர் கடலுக்குச் சென்றது. இந்த அணைக்குத் தண்ணீர் திறந்து விடக் கோரி 2020 ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 2023 ஜூன் மாதத்திற்குள் ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும், அதுவரை ஆறு மாதங்க ளுக்கு ஒரு முறை மூன்று நாட்களுக்குத் தண் ணீர் விட வேண்டும் என 2021 நவம்பர் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அம்மாத இறுதி யில் பிஏபி அணையில் இருந்து தண்ணீர் கிடைத்தது. அதற்குப் பிறகு தண்ணீர் கிடைக் கவில்லை. உயர்நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் அரசாணை அனைத்தும் காகிதங்களில் எழுதப்பட்டதாகவே உள்ளன. நடைமுறை யில் இல்லை. எனவே பிஏபி மண்டல பாச னங்கள் ஆரம்பிக்கும் முன்னரோ, முடிவுற்ற பின்னரோ வட்டமலைக்கரை ஓடை அணைக் குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும். சில குளங்களுக்கு சரியான அரசாணை இல்லாத போதும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிறிய அணைக்குத் தண்ணீர் வழங்க மறுப்பது முறையாகாது. உடனடி யாக அரசாணை பெற்று இந்த அணைக்கு தண்ணீர் விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர்ப் பாதுகாப்புச் சங்கத் தலைவர் ப.வேலுச்சாமி கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தனியார் விடுதியின் அத்துமீறல்: பொதுமக்கள் புகார்
தனியார் விடுதியின் அத்துமீறல்: பொதுமக்கள் புகார் நாமக்கல், டிச.28- ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியின் அத்துமீறல் குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த தங்கும் விடுதியில் 60க்கும் மேற் பட்ட அறைகள் உள்ளன. 10க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங் களும், அரசு பொதுத்துறை வங்கியும் செயல்பட்டு வருகி றது. இந்நிலையில், தனியார் விடுதி மற்றும் வணிக நிறுவ னங்களுக்கு வரக்கூடிய வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி பெற்ற இடத்தை வாடகைக்கு விட்டு வசூல் செய்வதாக கூறப்படுகிறது. இந்த தனியார் விடுதியால் அப்பகுதியில் உள்ள வீதிகளின் இருபுறமும் இருசக்கர வாக னங்களும், நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தப்படுகிறது. எனவே, அரசு விதிமுறைகளை மீறி பார்க்கிங் பகுதியை வாட கைக்கு விட்ட தனியார் விடுதி மீது நடவடிக்கை எடுத்து, வீதிகளில் வாகனங்களை நிறுத்தாத வண்ணம் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் அத்தியாவசிய தேவைகளான குடிநீர் வாகனங்கள், நகராட்சியின் குப்பை வாகனம் கூட உள்ளே வராத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மக்க ளின் குற்றச்சாட்டை மனுவாகப்பெற்ற மாவட்ட ஆட்சியர் ச. உமா, தனியார் விடுதியின் கட்டுமான அப்ரூவலை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என நகராட்சி ஆணை யருக்கு உத்தரவிட்டார். மேலும், நகர்மன்றத் தலைவர் கவிதா சங்கர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோர் சம்பந்தப் பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப் பிக்க வேண்டுமென ஆட்சியர் தெரிவித்தார். இதன டிப்படையில் ராசிபுரம் நகர்மன்றத் தலைவர் கவிதா வெள்ளி யன்று சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப் போது பொதுமக்கள் தனியார் விடுதி மீது புகாரளித்தனர்.
வனத்துறையிடம் சிக்கிய “புல்லட்” யானை
உதகை, டிச.28- பந்தலூர், சேரங்கோடு அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வீடுகளை இடித்து சேதப்படுத்திய புல்லட் காட்டு யானையை வனத்துறையி னர் 2 மயக்க ஊசி செலுத்தி பிடித்த நிலையில், முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்படுவதாக தக வல் வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர், சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட் டாரப் பகுதிகளில் உலா வந்து, தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புகளை இடித்து சேதப்ப டுத்தி வந்த சிடி 16 என்ற புல்லட் காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. குறிப்பாக, 40 வீடுக ளுக்கு மேல் இடித்து சேதப்படுத்திய நிலையில், பந்தலூர் அதன் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் பல் வேறு கட்ட போராட்டங்களை மேற் கொண்டனர். அதேபோல வனத் துறையினருக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து சிடி16 என்ற காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு வனத் துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இதனை அடுத்து வெள்ளி யன்று காலை முதல் யானையின் நட மாட்டம் மற்றும் யானையின் இருப்பி டம் குறித்து இரண்டு கும்கி யானை கள் உதவியுடனும், ட்ரோன் கேமிரா உதவியுடனும் 80 க்கும் மேற்பட்ட வனப் பணியாளர்கள் யானையின் நடமாட் டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், யானை மலைப் பகுதியில் இருந்து சமதளப் பகுதிக்கு வரும் வரை காத்திருந்த வனத்துறை யினர், அனுபவமிக்க கால்நடை மருத் துவர்களான கலைவாணன் மற் றும் ராஜேஷ் தலைமையிலான குழுக் கள் புல்லட் யானைக்கு மயக்க ஊசி செலுத்த திட்டமிட்டது. இதனை யடுத்து அய்யங்கொள்ளி பகுதியில் இருந்த புல்லட் யானையின் இருப்பிடத்தை உறுதி செய்த வனத்துறையினர் வெள்ளியன்று இரவு இரண்டு மயக்க ஊசிகள் செலுத்தினர். உடனே மயக்க நிலையை அடைந்த சிடி 16 என்று குறிப்பிடப்படும் புல்லட் காட்டு யானை இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறை வாகனத் தில் ஏற்றும் பணி தீவிரமாக நடை பெற்றது. சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் புல்லட் காட்டு யானை வனத்துறையினர் வாகனத்தில் ஏற்றினர். தற்போது முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் கிரால் கூண்டு அமைக்கப்பட்டு யானையை கண் காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.