districts

img

மதிமுக சார்பில் 27 ஆம் ஆண்டு சமத்துவப் பொங்கல் விழா

திருப்பூர், ஜன.17– திருப்பூர் மாநகராட்சி 24 ஆவது  வார்டு சாமுண்டிபுரத்தில் மதிமுக சார் பில் 27 ஆம் ஆண்டு சமத்துவ பொங் கல் விழா நடைபெற்றது.  ஆண்டுதோறும் மும்மதப் பெண் கள் பங்கேற்று பொங்கல் வைத்துக்  கொண்டாடும் சமத்துவ பொங்கல்  விழா சிறப்பாக நடைபெற்று வருகி றது. அந்த வகையில் தை முதல் நாளான  செவ்வாயன்று, திருப்பூர் மாநகராட்சி  24 ஆவது வார்டு மாமன்ற உறுப்பின ரும், மதிமுகவின் மாநகர் மாவட்டச்  செயலாளருமான நாகராஜ் ஏற்பாட்டில் 27 ஆவது ஆண்டு சமத்துவ  பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதி யில் நடைபெற்றது.  இதில் மூன்று மதங் களை சார்ந்த 5 ஆயிரம் பெண்கள்  கலந்து கொண்டு சூரிய பொங்கல் வைத் தனர். இந்நிகழ்வை  மதிமுகவின் மாநில தொண்டர் அணியின் அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி, சென்னை  பெரு நகர மாமன்றமதிமுக உறுப்பினர்  ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு  பெண்களுக்கு பொங்கல் சீர் வரிசை  கொடுத்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சி யின் முன்னதாக சாமுண்டிபுரம் பகு தியை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பெண்கள் கும்மிப்பட்டு பாடி  பொங்கல் விழாவினை சிறப்பாக  கொண்டாடி மகிழ்ந்தனர். ஊர் கூடி  பொங்கல் வைக்கும் நிகழ்வை காண  திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.