districts

img

‘நானும் ஒரு பெண்தானே’ நூல் வெளியீட்டு விழா

தருமபுரி, பிப்.2- தருமபுரி முத்து இல்லத்தில் ‘நானும்  ஒரு பெண்தானே’ என்ற நூல் வெளி யீட்டு விழா நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், கடத்தூர் நூல கர் சி.சரவணன் எழுதிய ‘நானும் ஒரு  பெண்தானே’ என்னும் சமூக நாவல் வெளியீட்டு விழா, தருமபுரி முத்து இல் லத்தில் சனியன்று நடைபெற்றது. இவ் விழாவிற்கு படைப்பாளர் பதிப்பாளர் சங்கச் செயலாளர் மா.பழனி தலைமை  வகித்தார். தகடூர் புத்தகப் பேரவைத் தலைவர் இரா.சிசுபாலன் முன்னிலை வகித்தார். படைப்பாளர் சங்க பொரு ளாளர் அறிவுடைநம்பி வரவேற்றார். தக டூர் புத்தகப் பேரவை செயலாளரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரு மான இரா.செந்தில் நூலை வெளியிட, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ம. கௌரிசங்கர் பெற்றுக் கொண்டார். தரு மபுரி மாவட்டத் தமிழ் கவிஞர் மன்றத்  தலைவர் கோ.மலர்வண்ணன் நூலை  அறிமுகம் செய்து பேசினார். தகடூரான் அறக்கட்டளை தமிழ்மகன் இளங்கோ, குறள்நெறிப் பேரவை செயலாளர் பே. வெங்கடேசன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். நூலாசிரியர் சி.சரவணன் ஏற் புரையாற்றினார். முடிவில், இரா.முத்து லட்சுமி நன்றி கூறினார்.