districts

img

மைசூர் விரைவு ரயில் கடலூர் வரை நீட்டிப்பு

சிதம்பரம், ஜூலை 18- தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக கடலூர்,  அண்ணாமலைப் பல்கலைக்கழகம், நடராஜர் கோயில், பிச்சா வரம் சுற்றுலா மையம் என சிதம்பரம் சுற்றுலா மற்றும் ஆன்மிக நகரமாக இருந்து வரு கிறது. ஆனால், கடலூர் மற்றும் சிதம்பரம் மற்றும் கோவை வழியாக கேரளம், கர்நாடகா மாநிலங்களுக்கு போதிய ரயில் வசதி இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

எனவே, மயிலாடுதுறை-மைசூர் விரைவு ரயில்,  மயிலாடுதுறை-கோவை ஜன் சகாப்தி விரைவு ஆகிய ரயில்களை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க வேண்டும். அயோத்தி - ராமேஸ்வரம் சாரதா சேது விரைவு வண்டி, தாம்பரம்-செங்கோட்டை, சென்னை எழும்பூர்-காரைக்கால் ஆகிய 3 ரயில்களும் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். சிபிஎம், திமுக, காங்கிரஸ், விசிக கட்சி,  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து போராடி வந்தன.  

இதனை தொடர்ந்து சிதம்பரம் சாராட்சியர் ராஷ்மிராணி தலைமையில் 2 கட்ட அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஜன்சதாப்தி, மைசூர் ரயில் கடலூர் துறை முகம் வரை நீடித்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.  இந்த நிலையில், நீண்ட கால கோரிக்கையை ஏற்றுள்ள தென்னக ரயில்வே, முதல் கட்டமாக மயிலாடுதுறை - மைசூர் விரைவு ரயில் கடலூர் துறைமுகம் வரை ஜூலை 19 ஆம் தேதியில் இருந்து இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாவட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.