சென்னை, மார்ச் 7 - காவலர்கள் தாக்கி யதால், வாலிபர் தற்கொலை செய்துகொண்டது தொடர் பாக திங்களன்று (மார்ச் 7) வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவரை மார்ச் 5 அன்று அபிராமபுரம் காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் தாக்கியுள்ள னர். இதனால் அவமானத் தால் மனமுடைந்த ஹரிஷ், அன்றிரவு வீட்டிற்கு வந்ததும் விஷம் குடித்துள்ளார். ராயப் பேட்டை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மார்ச் 6 அன்று உயிரிழந்தார். இந்தமரணம் தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் யோகலட்சுமி திங்களன்று (மார்ச் 7) மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத் தில் வைத்து விசாரணை நடத்தினார். அதனை தொடர்ந்து பிரேத பரிசோ தனை நடந்தது. அதன் பின்னர் வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் அவரது உடல் மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.