சென்னை, ஆக. 22 - நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் சேர்க்கை விண்ணப் பங்களை தராமல் டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகம் மாணவர்களை அலை கழித்து வருகிறது. டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகம் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் 2 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடத்தவில்லை. இதனை கண்டித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் போராட்டத்தையடுத்து தமிழக அரசு தனி அதிகா ரியை நியமனம் செய்தது. இதனை எதிர்த்து கல்லூரி நிர்வாகம் நீதி மன்றம் சென்றது. மாணவர் சேர்க்கையை நடத்த கல்லூரி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திங்க ளன்று (ஆக. 22) சுமார் 50 மாணவர்கள் விண்ணப் பம் கேட்டு கல்லூரிக்கு சென்றனர். விண்ணப்பங் களை நிர்வாகம் தர மறுத்துள்ளது. இதனையடுத்து பாதிக் கப்பட்ட மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த்கு மார், செயலாளர் ரா.பாரதி ஆகியோர் தலைமையில், கல்லூரி கல்வி இணை இயக்குநர் முனைவர் ராவ ணனை சந்தித்து மனு அளித்த னர். அதில், டி.பி.ஜெயின் கல்லூரிக்கு சென்று விண்ணப்பம் கேட்ட மாண வர்களுக்கு நிர்வாகம் விண்ணப்பம் தரவில்லை. மதிப்பெண் சான்றிதழ் நகலும், இதர தகவல்க ளையும் வாங்கி கொண்டு திருப்பி அனுப்பியுள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சேர்க்கையை முறையாக நடைபெறுவதை உறுதிப் படுத்த வேண்டும்” என்று கோரியுள்ளனர்.