tamilnadu

மாணவர்கள் புகார், கருத்துக்கள் தெரிவிக்க பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள்....

சென்னை:
மாணவர்கள் தங்கள் புகார் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க பள்ளி வளாகத்தில் ‘பாதுகாப்பு பெட்டி’கள் வைக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டப் பேரவையில் தாக் கல் செய்யப்பட்ட பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், மாணவர்களிடம் இருந்தும் பெற் றோர்களிடமிருந்தும் பாலியல் தொல்லை குறித்த புகார்களை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை பள்ளிக்கல்வி இயக்குனரக வளாகத்தில் அமைக் கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரிடமும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் கையேடு ஒன்று தயாரித்து வழங்கப்படும் என்றும், மாணவர்கள் தங்கள் புகார் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர் களை பாலியல் வன்முறைகளில் இருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொது நூலக இயக்ககத்தின் மூலம் 32 மாவட்ட மைய நூலகங்கள், கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் பிற அரசு உதவி பெறும் நூலகங்களிலுள்ள புத்தகங்களின் விவரங் களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நூற்பட்டியலை உருவாக்கும் பணி நடை பெற்று வருகிறது.இதன் மூலம், நூலகங்களில் உள்ள அனைத்துப் புத்தகங்களின் விவரங்களும் சர்வதேச தர நிலைகளின் அடிப் படையில் சரி செய்யப்பட்டு தொகுக்கப்படும். இதன் மூலம் வாசகர்கள், ஒரே இணையதளத்தின் மூலம் அனைத்துப் பொது நூலகங்களிலும் உள்ள புத்தகங்களை தேடும் வசதி ஏற்படுத்தப்படும் என கூறப் பட்டுள்ளது.