தில்லி முஸ்தபாஃபாத்தில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
தில்லியில் உள்ள முஸ்தபாஃபாத் பகுதியில், 4 தளங்களை கொண்ட அடுக்குமாடி கட்டடம் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் இருந்து இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் 8 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் பொறுப்பு படை மற்றும் தீயணைப்பு படையினர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.