சென்னை, நவ. 7 - தமிழக தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் மூத்த தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன் (சிஎஸ்பி) பிறந்த நாள் நூற்றாண்டு நிறைவு விழா புதனன்று (நவ.6) சென்னையில் நடைபெற்றது. பிஎஸ்என்எல் எம்பிளாயீஸ் யூனியன், ஓய்வூதியர் சங்கம், ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. ‘சி.எஸ்.பஞ்சாபகேசன் நூற்றாண்டு மலரை’ பிஎஸ்என்எல்இயு பொதுச் செயலாளர் பி.அபிமன்யு வெளியிட, சிஎஸ்பி குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். ‘சி.எஸ்.பஞ்சாபகேசன் - இயக்கத்தோடு இணைந்த வாழ்க்கை’ எனும் நூலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மூத்த தலைவர் பி.சம்பத் வெளியிட, ஓய்வூதியர் சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் சி.கே.நரசிம்மன் பெற்றுக் கொண்டார். இலக்கணத்திலிருந்து இலக்கியங்கள் 1992ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி யின் அகில இந்திய மாநாட்டில் முதன்முறையாக சி.பஞ்சாபகேசனு டன் அறிமுகம் ஏற்பட்டதை நினைவு கூர்ந்து பேசிய பி.சம்பத், “தலைசிறந்த இடதுசாரி இயக்க ஊழியர், பொது வுடமைவாதி என்பதற்கு இலக்கணமாக சி.எஸ்.பி. இருந்தார். அந்த இலக் கணத்தில் இருந்து ஏராளமான இலக்கி யங்கள் (தலைவர்கள்) உருவாகின. இயக்கத்திற்குள் தவறு செய்கி றவர்களை இரக்கமின்றி, கறார் தன்மை யோடு அணுகினார். இயக்க நலனை முன்னிறுத்தியே செயல்பட்டார். மார்க்சிய சித்தாந்தத்தின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் சி.எஸ். பஞ்சாபகேசன். நபர்களை தேர்ந் தெடுத்து, தத்துவார்த்த, அமைப்பு ரீதி யான பயிற்சி கொடுத்து இடதுசாரி ஊழி யர்களை உருவாக்கினார். உடலை வருத்தி இயக்கத்தை வளர்த்தார். அய ராத பணியால் பார்கின்சன் (ஞாபக மறதி) நோயால் பாதிக்கப்பட்டார். சிறந்த கொள்கை, அதை செயல் படுத்துவதற்கன செயல் திட்டம், உத்திகள் ஆகியவற்றை வகுத்தாலும், செயல்படுத்த திறமைமிக்க ஊழி யர்கள் தேவை. சிஎஸ்பி மிகச்சிறந்த ஊழியராக மட்டுமின்றி, ஏராளமான ஊழியர்களையும் உருவாக்கினார். அவரைப் போன்று தியாகப் பூர்வமான ஊழியர்கள் ஏராளமாக உருவாக வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இடதுசாரிகளுக்கு எதிர்கால மில்லை என்றால், இந்தியாவிற்கு எதிர் காலமில்லை. இலங்கையில் நிகழ்ந்தது போன்று இந்தியாவிலும் நிகழும். பொருளாதார போராட்டத்தோடு அரசி யல் போராட்டத்தையம் இணைத்து நடத்த வேண்டும். இதற்கு சிஎஸ்பி-யை போன்று ஏராளமான ஊழியர்களை உருவாக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார். பி.அபிமன்யு தொலைதொடர்பு தொழிற்சங்க இயக்க வரலாறு, அதில் எதிரிகளை எதிர்கொண்ட முறை, பணி நீக்கம் செய்யப்பட்டபோதும் தளராத சிஎஸ்பி- யின் ஆளுமை மிக்க பங்களிப்பு, ஊழி யர்களை உருவாக்க கையாண்ட முறை போன்றவற்றை பிஎஸ்என்இயு பொதுச் செயலாளர் பி.அபிமன்யு நினைவுகூர்ந்து பேசினார். ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கைகளையும், உழைப்பாளிகள் சுரண்டப்படுவதையும் விளக்கிய அவர், முதலாளித்துவ பொருளாதார சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும். தமிழ கம் முழுவதும் சிஎஸ்பி-யின் நூற்றாண்டு செய்தியை சிறுசிறு கூட்டங்களாக நடத்தி ஊழியர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார். பிஎஸ்என்எல்இயு அகில இந்திய உதவி பொதுச்செயலாளர் எஸ்.செல்லப்பா நிகழ்விற்கு தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் இயு மாநில பொதுச்செயலாளர்கள் எம்.ஸ்ரீதர் சுப்ரமணியன் (சென்னை), பி.ராஜூ (தமிழ்நாடு), ஓய்வூதியர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் எஸ்.மோகன்தாஸ், மாநில செயலாளர்கள் கே.கோவிந்தராஜ் (சென்னை), ஆர்.ராஜசேகர் (தமிழ்நாடு), ஒப்பந்த ஊழியர் சம்மேளனத்தின் உதவி பொதுச்செயலாளர் ஏ.பாபு ராதா கிருஷ்ணன், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எம்.சையது இத்ரீஸ், சிஎஸ்பி-யின் மகன்கள் சி.பி.கிருஷ்ணன், சி.பி.சந்திர சேகரன் உள்ளிட்டோர் பேசினர்.