districts

img

கழிவுநீர் கால்வாய்கள் சீரமைப்போம்: வந்தவாசியில் சிபிஎம் வேட்பாளர் வாக்குறுதி

திருவண்ணாமலை,பிப்.6- வந்தவாசி நகரத்தில் கழிவுநீர் கால்வாய் சீர மைக்க நடவடிக்கை எடுக்கப்ப டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் வாக்குறுதி யளித்தார். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி 21 ஆவது வார்டு தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ந.ராதாகிருஷ்ணன் போட்டி யிடுகிறார்.  வேட்பாளர் ராதா கிருஷ்ணன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மக்களை சந்தித்த ஆதரவு கோரினார். அப்போது,“  வந்தவாசி நகரம் கேசவா நகர், சன்னிதி தெரு ஆகிய குறுக்கு தெரு பகுதிகளில், கழிவு நீர் கால்   வாய்களை சீரமைத்து, மழை நீரும், கழிவு நீரும் முறை யாக வெளியேற்ற நட வடிக்கை எடுப்போம்” என வாக்குறுதியளித்தார்.