சென்னை, மே 29 - ஒன்றிய பாஜக அர சின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து சனிக்கிழமையன்று (மே 28) மத்திய சென்னை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 6 மையங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. ஆயிரம் விளக்கு பகுதிக் குழு சார்பில் சூளைமேட்டில் நடைபெற்ற கூட்டத்திற்கு இரணியன் தலைமை தாங்கி னார். மத்தியக்குழு உறுப்பி னர் உ.வாசுகி,திரிபுரா மாநிலக் குழு உறுப்பி னர் ஜெர்னாதாஸ் உரை யாற்றினர். பகுதிச் செய லாளர் வெ.ரவீந்திரபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சேப்பாக்கம் – திருவல்லி கேணி பகுதிக்குழு சார்பில் ஐஸ்அவுசில் நடை பெற்ற கூட்டத்திற்கு எஸ்.டி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மகராஷ்டிரா மாநிலக்குழு உறுப்பினர் நசீமாஷேக், பகுதிச் செய லாளர் கவிதா கஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். துறைமுகம் பகுதிச் செயலாளர் ஜலாலுதீன் தலைமையில் ஏழு கிணறில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் தில்லி மாநிலக்குழு உறுப்பினர் மைமூனா முல்லா உரையாற்றினார். எழும்பூர் பகுதிக்குழு சார்பில் புல்லாபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கே.சுரேஷ் தலைமை தாங்கி னார். ஆந்திரா மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரமாதேவி, மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, பகுதிச் செயலாளர் கே.முரு கன் உள்ளிட்டோர் பேசினர். அண்ணாநகர் பகுதிக் குழு, பிபி தோட்டத்தில் நடை பெற்ற கூட்டத்திற்கு ரா.நாக ரத்தினம் தலைமை தாங்கி னார். ஹரியானா மாநில செயற்குழு உறுப்பினர் ஜக்மதி சங்வான் உரை யாற்றினார். வில்லிவாக்கம் பகுதிக் குழு அம்பேத்கர் நகரில் ஏ.விமலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.புண்ணியவதி, பகுதிச் செயலாளர் ஜி.அன்பழகன் 98வது மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி உள்ளிட்டோர் பேசினர். இந்தக் கூட்டங்களில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இரா.முரளி, சி.திருவேட்டை, எஸ்.கே.முருகேஷ், வெ. தனலட்சுமி, வே.ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று பேசினர்.