சென்னை, ஆக. 28 - விஐடி பல்கலைக்கழக, சென்னை வளாகத்தின் பட்டமளிப்பு விழா சனிக் கிழயைமன்று (ஆக.27) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பல் கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான ஜி.விஸ்வ நாதன் தலைமை தாங்கினார். துணைவேந் தர் ராம்பாபு கொடாலி வரவேற்றார். இந்த பட்ட மளிப்பு விழாவில் 48 ஆராய்ச்சி மாணவர்கள் உள்பட 2040 மாணவர்க ளுக்கு பட்டம் வழங்கப் பட்டது. இவர்களில் 30 பேர் தங்கப் பதக்கம் பெற்றனர். நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும் ஜவகர்லால் நேரு பல்கலை வேந்தர் விஜய் குமார் சரஸ்வத் மாணவர்க ளுக்கு பட்டங்களை வழங்கி னார். இந்நிகழ்வில் பேசிய விஜய் குமார் சரஸ்வத், “நவீன இந்தியா உருவாக்கு வதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே முதன்மை பங்காற்றும் என்று ஜவகர்லால் நேரு கூறியதை நினைவில் கொண்டு மாணவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும். உலகம் நம் வளர்ச்சியை எதிர்நோக்கும் இத்தரு ணத்தில் பட்டதாரிகளாகிய உங்களின் பங்கு சுற்றுச் சூழல் அமைப்பு, 4ம் தொழில் துறை புரட்சி போன்றவற் றிற்கு ஏதுவாகத் திகழ வேண்டும்” என்றார். ஸ்விட்ச் இந்தியா நிறு வன தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் பாபு குறிப் பிடுகையில், ‘‘பட்டம் பெறும் மாணவர்கள் பொருளாதார வளர்ச்சியில் விஸ்வரூப வேகத்தில் பயணிக்கும் நம் இந்திய நாட்டிற்கு வினையூ க்கிகளாகத் திகழ வேண்டும், இன்றைய இளைஞர்கள் தற்போதைய சூழலில் ஏற்படுகின்ற சவால்களை எதிர்கொள்வதற்கு ஆசை யுடனும், வேட்கையுட னும், புதுமை முயற்சியுட னும் செயலாற்ற வேண் டும்’’ என்றார். வேந்தர் ஜி.விஸ்வ நாதன் பேசுகையில், ‘‘இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவியரின் விழுக்காடு அதிகமாக உள்ளது. தமிழக அரசு தரமான உயர்கல்வி வழங்குவதே இதற்கு கார ணம். மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் உள்ளன. கல்வி மட்டுமே நமது சமூகப்பார்வையை மாற்றும். இதன் மூலமாகத் தான் நாட்டில் நிலவும் சமத்து வமின்மை என்ற குறைபாடு அகலும். ஒன்றிய அரசாங் கம் உயர்கல்விக்கு ஒதுக் கும் நிதியை அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.