districts

விழுப்புரம் நகராட்சி ரூ.2.50 கோடியில் மீன் அங்காடி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம், மார்ச் 24-    விழுப்புரம் அனிச்சம் பாளையம் சாலை யில் ரூ. 2.50 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மீன் அங்காடி கட்டிடங்களை விரை வில் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். விழுப்புரம் நகராட்சியில் டாக்டர் கலை ஞர் நகர்ப்புற மேம்பாட்டு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.76.20 லட்சத்தில் கீழ்பெரும்பாக்கம் வீட்டு வசதி குடியிருப்பு மற்றும் திடீர் குப்பம், ஏ.டி.எம். நகர் ஆகிய பகுதிகளில் பேவர் பிளாக் சாலை கள்உள்ளிட்ட பதினொரு பணிகள் நடை பெற்று வருகிறது. கீழ்பெரும்பாக்கம் வீட்டு வசதி குடி யிருப்பு பகுதியில் ரூ.2.60 லட்சம் மதிப்பில் 125 மீட்டர் நீளம் கொண்ட பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், அதே பகுதியில் ரூ.2.50 கோடியில் நூல கம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடம் கட்டு மான பணி நடந்து வருவதையும் மாவட்ட ஆட்சியர் மோகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டுமான பணிகளின் தன்மை குறித்து கேட்டறிந்ததோடு இப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். விழுப்புரம் அனிச்சம் பாளையம் சாலையில் ரூ. 2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மீன் அங்காடி கட்டிடங்களை விரைவில் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். வருகின்ற 5 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தரும்போது புதிதாக கட்டப்  பட்டுள்ள கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார். எனவே பணிகளை கால தாமதமின்றி திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்கவும் பணிகள் நடைபெறும்போது பொறியாளர்கள் உடனிருந்து ஆய்வு செய்து பணிகளை முழுமையாக முடித்திட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின்போது விழுப்புரம் நகரமன்றத் தலைவர் சக்கரை தமிழ்ச் செல்வி, துணைத் தலைவர் சித்திக் அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்ளிட்டோருர் உடனிருந்தனர்.