districts

சென்னை முக்கிய செய்திகள்

யுனைட் பொதுச்செயலாளர் வெல்கின் தாயார் காலமானார்

சென்னை, நவ. 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினரும், யுனைட் அமைப்பின் பொதுச் செயலாளருமான அழகுநம்பி வெல்கினின் தாயார் சொ.தேன்மொழி திங்களன்று (நவ.4) காலமானார். அவருக்கு வயது 63. அன்னாரது உடல் அஞ்சலிக்காக திருவான்மியூர் பத்திரிகையாளர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், ஜி.சுகுமாறன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.சுந்தரராஜன், ஐ.ஆறுமுகநயினார், ஆர்.சுதீர், மாவட்டச் செயலாளர்கள் ஆர்.வேல்முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்திய சென்னை), செயற்குழு உறுப்பினர்கள் கே.வனஜகுமாரி, டி.சுந்தர், எஸ்.குமார், ச.லெனின், பகுதிச் செயலாளர்கள் எஸ்.முகமது ரஃபி (வேளச்சேரி), ப.ஜெயவேல் (சோழிங்கநல்லூர்), ஏ.நடராஜன் (விருகம்பாக்கம்), எம்.தாமு (பல்லாவரம்), மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சி.பிரபாகரன், ம.விஜயகுமார், திக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சரவணச்செல்வி, செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலியட், சிஐடியு மாநிலச் செயலாளர்கள் கே.சி.கோபி குமார், பா.பாலகிருஷ்ணன், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் தீ.சந்துரு, மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்தகுமார், செயலாளர் ரா.பாரதி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து செவ்வாயன்று (நவ.5) பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

தண்டவாளத்தை கடக்க முயன்ற  2 பேர் பலி

செங்கல்பட்டு, நவ. 5- மறைமலை நகரில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் மீது ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே பலி யானார்கள். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்வேலன் (65). இவரது மனைவி பசும்பொன் (59). இரு வரும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்று அங்கி ருந்து ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்வ தற்காக, மறைமலை நகர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற விரைவு ரயில் இருவர் மீது மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறை யினர், இருவரின் உடல் களையும் மீட்டு பிரேத பரி சோதனைக்காக குரோம்  பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜப்திக்கு வந்த வீட்டை லீசுக்கு விட்டு ரூ.3.5 லட்சம் மோசடி

புதுச்சேரி, நவ. 5- புதுவை அரியாங்குப்பம் சின்னசாமி முதலியார் தெருவை சேர்ந்தவர் பாத்திமா (44). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரில் உள்ள ஒரு வீட்டை பார்த்துள்ளார். அந்த வீட்டின் உரிமையாளரான கோலாஸ் நகரை சேர்ந்த சார்லஸ் என்ப வரை பாத்திமா தொடர்பு கொண்டு பேசி யுள்ளார். அப்போது சார்லஸ் வீட்டை 11 மாதத்துக்கு லீசுக்கு ரூ.3.5 லட்சம் தருவதாக கூறியுள்ளார். அதன்படி பாத்திமா ரூ.3.5 லட்சத்தை கொடுத்துள்ளார். பின்னர் 1 வாரத்திற்குள் வீட்டை சீர் செய்து தருவதாக சார்லஸ் உறுதி அளித்துள்ளார். அதன்பிறகு பாத்திமா அந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது, தனியார் வங்கியின் ஜப்தி நோட்டீஸ் வீட்டில் ஒட்டப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் பிறகு சார்லசை தொடர்பு கொள்ள முயன்ற போது முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாத்திமா இது குறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சார்லஸை தேடி வருகின்றனர்.

126 ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அபராதம்

வேலூர், நவ.5-  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தீபாவளியையொட்டி நடந்த சிறப்பு சோதனை திங்களுடன் நிறைவடைந்தது. இதில் 126 ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு ரூ8.16 லட்சம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பண்டிகை காலத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்து சிலர் லாபம் பார்க்கின்றனர். கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்துள்ளது. மேலும் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. போக்குவரத்து ஆணை யர் உத்தரவின்பேரில் கடந்த 28ம் தேதி தொடங்கி திங்களன்று காலை வரை சிறப்பு குழுக்கள் அமைத்து, டோல்கேட்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வேலூர் சரகத்திற்கு உட்பட்ட ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஒசூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சிறப்பு குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தினர். அதன்படி, கடந்த 28ம்தேதி முதல் திங்கள் அதிகாலை வரை 7 நாட்களாக நடந்த சோதனையில் போக்குவரத்து விதி மீறல், சாலை வரி செலுத்தாதது, டிரைவர் சீட் பெல்ட் அணியாமல் பேருந்து இயக்கியது, அதிக கட்டணம் வசூல் உள்ளிட்ட விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டது. வேலூர் சரகத்தில் மொத்தம் 1,201 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு, அதில் 126 வாக னங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு வரி மற்றும் அபராதமாக ரூ8 லட்சத்து 16 ஆயிரத்து 250 அபராதமாக விதிக்கப்பட்டது. வரி செலுத்தாத ஒரு ஆம்னி பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

வடகம் தயாரிக்கும்  குடோனில் தீ விபத்து

கடலூர், நவ. 5-  கடலூர் முதுநகர் அருகே வடகம் பாக்கெட் தயாரிப்பு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள தாளிப்பு வடகம் மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தன. கடலூர் முதுநகர் இருசப்பன் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (30). இவர் சுத்துக்குளம் பகுதியில் வடகம் பாக்கெட் தயாரிக்கும் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு வந்து விட்டார். மீண்டும் திங்களன்று காலை அங்கு சென்று பார்த்தபோது வடகம் பாக்கெட் மூட்டைகள் வைத்திருந்த குடோனில் இருந்து புகை வெளியே வந்துள்ளது. இதன் பின்னர் கதவை திறந்து பார்த்தபோது அங்கு வைத்தி ருந்த 150 மூட்டைகள் எரிந்து வடகம் அனைத்தும் சேத மாகி இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினர். சேதம் அடைந்த வடகம் மூட்டைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து  20 சவரன் நகை கொள்ளை

திண்டிவனம், நவ. 5- திண்டிவனம் அருகே பெண் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் சரசு (38), விவசாய தொழிலாளி. இவரது கணவர் மோகன் கடந்த 7 வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டதால், சரஸ் தனது மகன் நரேன்குமார், மகள் ஜெயகாந்தி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிறன்று சரசு மற்றும் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு பக்கத்து தெருவில் உள்ள உறவினர் பிரபாகரன் என்பவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டினுள் சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது.

சிதிலம் அடைந்த பென்னலூர் சாலை: சீரமைக்க கோரிக்கை

காஞ்சிபுரம், நவ.5- பென்னலூர் ஊராட்சியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பெரும்புதூர் ஒன்றியம், பென்னலூர் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பென்னலூர் ஊராட்சியை சுற்றி ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளன. பென்னலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிக்கு செல்ல திருபெரும்புதூர் – குன்றத்தூர் சாலையையும், பூந்தமல்லி வழியாக சென்னைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். திருபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. தற்போது, நெடுஞ்சாலையை இணைக்கும் பென்னலூர் சாலை குண்டும், குழியுமாக மாறிய போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால், இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, ஜல்லிகற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திடீரென தீப்பற்றி எரிந்த கார் 

செங்கல்பட்டு, நவ. 5- திருவேற்காடு அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (31). தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊரான கும்பகோணத்திற்கு  குடும்பத்துடன் ‘மாருதி-800’ காரில் சென்று திரும்புகையில் திடீரென காரின் முன் பக்கம் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனைக்கண்ட சக வாகன ஓட்டிகள் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

குழந்தை தொழிலாளர்கள் உட்பட கொத்தடிமைகளாக இருந்த 5 பேர் மீட்பு

சென்னை, நவ. 5- சென்னையில் குழந்தை தொழிலாளர்கள் உட்பட 5 கொத்தடி மைகள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் திருப்பதி நகரில் வசிப்பவர் ரஷிதா (49). இவரது வீட்டில் சிறுவர்கள் உட்பட 5 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகவும், அடித்து துன் புறுத்தப்படுவதாகவும் வளசர வாக்கம் காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அதிகாரி தங்கபாண்டியன் புகார் அளித்தார். புகாரின் பேரில் ரஷிதா வீட்டில் சோதனை நடத்திய காவல்துறையினர், 13 வயது சிறுவன், 17 வயது சிறுமி, ரேஷ்மா (20), சந்தியா (20), சபாபதி ராதா  (34) ஆகிய 5 பேரை மீட்டுள்ள னர். இதையடுத்து அவர்களை அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர், வீட்டின் உரிமையாளர் ரஷிதாவிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர். விசார ணையில் ரேஷ்மா என்ற பெண் 6 வருடங்கள் பணிபுரிய ஒன்றரை லட்சம் ரூபாய் முன்பணம் கொடுத்ததாகவும், 17 வயது சிறுமி மூன்று வருடங்கள் பணிபுரிய ரூ. 3லட்சம் முன்பணம் கொடுத்த தாகவும், சந்தியா என்ற பெண் 4வருடம் பணிபுரிய ரூ4 லட்சம் கொடுத்ததாகவும் ரஷிதா தெரிவித் துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள வளசர வாக்கம் காவல் துறையினர், ரஷிதாவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளியில் ஏற்பட்ட வாயு கசிவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

சென்னை, நவ. 5- திருவொற்றியூர் தனியார் பள்ளி யில் கடந்த மாதம் ஏற்பட்ட வாயு கசிவு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் துறை செயலாளரிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. திருவொற்றியூர் தனியார் பள்ளி யில் கடந்த மாதம் 25ஆம் தேதி 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென மயக்கம் அடைந்தனர். வாயு கசிவு காரணமாக மாணவர்கள் மயக்கம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி களும் பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில், 10 நாள் விடு முறைக்கு பிறகு பள்ளி திங்களன்று (நவ. 4) திறக்கப்பட்ட நிலையில், மீண்டும் மாணவர்கள் 6 பேர் மயக்கம் அடைந்தனர். அதை தொடர்ந்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. பின்னர் வாயு கசிவு குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடமாடும் இயந்திரம் மூலம் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. காற்றின் தரம் குறித்து பள்ளி யில் 2ஆவது நாளாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டனர். மேலும் பள்ளியில் 3  நாட்கள் ஆய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. காற்றின் தரம் கண்காணிக்கும் வாகனத்தை பள்ளி யில் நிறுத்தி 3 நாள் ஆய்வு செய்ய மாசுக் கட்டுப்பாடு வாரியம் முடிவு எடுத்துள் ளது. இதனிடையே வாயு கசிவு தொடர் பாக கடந்த மாதம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கையை மாசு கட்டுப் பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் துறை செயலாளரிடம் சமர்ப்பித்தது. அதில் பள்ளியில் உள்ள வேதியியல் ஆய்வ கத்தில் கடைசியாக ஆகஸ்ட் மாதம் செயல்முறை வகுப்புகள் நடை பெற்றுள்ளன என்றும், செயல்முறை வகுப்பிற்கு பிறகு பயன்படுத்தப்பட்ட ரசாயன பாட்டில்கள் சுத்தம் செய்யப் படாமல் வைக்கப்பட்டு இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அக்டோபர் 24 பகல் 12 மணி முதல் 25ஆம் தேதி பகல் 12 மணி வரை அமோனியா வாயு அளவில் மீறவில்லை என்பது தெளிவாகத் தெரி கிறது. ஒரு சதுர அடி பரப்பளவில் 400 மைக்ரோ கிராம் அமோனியா இருக்கலாம் என்ற அளவை தாண்ட வில்லை. அன்றைய தினம் ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் 0.4 முதல் 9.5 மைக்ரோகிராம் அமோனியா வரை மட்டுமே இருந்தது. எனினும் வாயு கசிவுக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என்று அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.