districts

img

போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம்

கடலூர், ஜன.3- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் கடலூர் மண்டல பணி மனை முன்பு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 109 மாத டிஏ உயர்வை நிலுவை உடன் வழங்க வேண்டும், 21 மாத ஓய்வூதிய பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெறும் நாளன்று பணப்பலன் வழங்க வேண்டும், பணி காலத்தில் இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஓய்வூதியர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். பொருளாளர் பழனி வேல் முன்னிலை வகித்தார்.  மாநில பொருளாளர் வரதராஜன், மாநில துணைத் தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் முத்துக்குமரன், கலியபெருமாள், குண சேகரன், தனபால் ஷாஜகான், ராஜ்மோகன், ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.