சென்னை,மே16- தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தற்போது மருத்துவ படிப்பு களை மேற்கொண்டு வரும் மாணவர்களால் நடத்தப் பட்டு வரும் ஆற்றுப்படை அறக்கட்டளை, தமிழகம் முழுவதும் தகுதி வாய்ந்த 150 ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சியை அளித்து வருகிறது. இந்த பயிற்சியில் சேரு வதற்கான தகுதித்தேர்வு வருகிற 29ந் தேதி சென்னை யில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கி றது. இந்த தேர்வு சென்னை யில் நேரடியாக நடைபெறும் என்றும், தேர்வு மையங்கள் குறித்த விவரம் விண்ணப் பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதித்தேர்வு குறித்து மேலும் விவரம் அறிய விரும்புபவர்கள் www.aatrupadaifo undation.com என்ற இணையதள முகவரி மற்றும் 6381128698, 6383999064 என்ற செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.