சென்னை, ஏப். 25 - குடும்பத் தகராறில் மனை வியின் கழுத்தை நெரிந்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. சென்னை கிண்டி மடுவங் கரை பகுதியை சேர்ந்த பிரசாத், தனது மனைவி உஷா ராணி மற்றும் அவரது ஐந்து வயது குழந்தையு டன் வசித்து வந்தார். அவ்வப்போது வீட்டிலிருந்து பணத்தை எடுத்து, குடித்து விட்டு மனைவியுடன் சண்டை போட்டு வந்துள் ளார். இந்நிலையில், 2020ம் ஆண்டு மனைவிக்கு தெரியா மல், பைக்கை விற்றுள்ளார். இது தொடர்பாக கேள்வி எழுப்பிய மனைவியை வாஷிங் மிஷின் பைப்பால் கழுத்தை நெரிந்து கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது பாரூக், பிரசாத் துக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையில் 8 ஆயிரம் ரூபாயை, 5 வயது பெண் குழந்தைக்கு வழங்கவும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ், கூடுதல் இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் தகுந்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.