districts

ஆரோவில் பன்னாட்டு நகரம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயம்

சென்னை,ஏப்.29- ஆரோவில்லில் பன்னாட்டு நகரம் அமைக்க  சுற்றுச்சூழல் அனுமதி அவசியம் என உத்தர விட்டுள்ள தேசிய பசுமை தீர்ப்பாய தென் மண்டல அமர்வு, மரங்களை வெட்டா மல், நீர்நிலைகளை பாதிக் காமல் சாலை அமைக்க முடி யுமா என கூட்டுக்குழு ஆய்வு  செய்யவும் உத்தரவிட் டுள்ளது. ஆரோவில் அறக் கட்டளை, தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரியின் சில பகுதியிலும் பன்னாட்டு நகர் அமைக்க, சுற்றுச்சூழல் தாக்க அறிவிப்பின் கீழ் எந்த வித அனுமதியின்றி கட்டு மானங்களை மேகொண் டுள்ளதாகவும்,  கிரவுண் சாலை என்ற பெயரில் சுற்று வட்ட சாலை அமைப்ப தற்காக வன பகுதியில் ஏராள மான மரங்களை வெட்டி யுள்ளதாக குற்றம் சாட்டி, நகரம் அமைக்க தடை கோரி சுற்றுச்சூழல் ஆர்வ லர் நவ்ரோஸ் கெர்சாஸ்ப் மோடி என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், மரங்களை வெட்டக் கூடாது என  ஆரோவில் அறக்கட்ட ளைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அடங்கிய அமர்வு, தற்போது ஆரோ வில் அறக்கட்டளை வசம் உள்ள 778 ஹெக்டேர் பரப்பில் பன்னாட்டு நகரம் அமைப்பதற்கு முறையான திட்டத்தை தயாரித்து, 2006ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிவிப்பின்படி, சுற்றுச் சூழல் ஒப்புதல் பெற  வேண்டும் எனவும், அதுவரை எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல கிரவுன் சாலை அமைக்கும் திட்டத்தை பொறுத்தவரை, தீர்ப்பாயத்தால் நியமிக்கப் பட்ட மாவட்ட ஆட்சித் தலை வர் தலைமையிலான கூட்டுக்குழு, சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து, மரங்கள் வெட்டுவதை குறை க்கும் வகையில் சாலையை எப்படி அமைக்கலாம் எனவும், சாலை அமைக்கும் பகுதியில் நீர்நிலைகள் உள்ளனவா என்பது குறித் தும் இரண்டு மாதங்க ளில் அறிக்கை சமர்ப்பிக்க  தீர்ப்பாயம் உத்தரவிட் டுள்ளது. இந்த குழு அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படை யில் மட்டுமே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத் திய தீர்ப்பாயம், குழு அறிக்கை அளிக்கும் வரை  எந்த மரங்களையும் வெட்டக்  கூடாது எனவும், வெட்டப் படும் ஒவ்வொரு மரத்துக் கும் பதிலாக 10 மரக்கன்று களை நட வேண்டும் என வும் ஆரோவில் அறக்கட்ட ளைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத் தது.