திருவண்ணாமலை, நவ.5- வந்தவாசி வட்டம், நல்லூர் கிராமத்தில், ஏரிபுறம்போக்கில் சுமார் 17 குடும்பங்கள் மூன்று தலைமுறையாக வீடுகட்டி வசித்துவருகின்றனர். இவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கக்கோரி தொடர்ந்து பல காலமாக போராடி வருகின்றனார். இந்நிலையில் செவ்வாய் அன்று (நவ.5) வந்தவாசி வட்டஅளவில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 16 குடும்பங்களை சேர்ந்த பழங்குடி சமூகத்தினர், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில், மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி வந்தவாசி வட்டாட்சியர் பொன்னுசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனார். அப்போது, ஒரு வாரத்தில் மாற்று இடம் வழங்குவதாக வட்டாட்சியர் தெரி வித்தார். இந்த நிகழ்வில், சிபிஎம் வட்ட செயலாளர் ஏ.அப்துல்காதர், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் சுகுமார், கரும்பு சங்க நிர்வாகி பெ.அரிதாசு மற்றும் ந.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.