விழுப்புரம், நவ.10- நூறு நாள் வேலை கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டம் திரு வெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வியாழனன்று (நவ. 10) காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திரு வெண்ணெய்நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கோரிக்கைகளை நிறை வேற்றுவதாக உறுதிய ளித்தார். ஆனால் கோரிக்கை கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி உத்தர வாதம் அளிக்க வேண்டும் என சங்க நிர்வாகி கள் தெரிவித்தனர். இதை யடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அப்போது மாற்றுத் திறனாளி களுக்கு 100 நாள் வேலை தடையில்லாமல் வழங்கப்படும், நீலநிற சிறப்பு அட்டை உடனடி யாக வழங்கப்படும், ஊராட்சிகளில் வழங்கப்பட வேண்டிய இதர நலத்திட்ட உதவிகள் அனைத்தும் தடையில்லாமல் வழங்கப் படும், ஊராட்சி செய லாளர்களுக்கு பயிற்சி அளிக்க சிறப்பும் கூட்டம் நடத்தப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து காத்தி ருக்கும் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் மாநிலத் துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் பி.முரு கன், மாவட்ட துணைச் செய லாளர் எம்.முத்துவேல், ஒன்றிய அமைப்பாளர் ஜி கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலைந்து சென்றனர்.